அவங்களோட 'கொரோனா தடுப்பூசி' செமயா வொர்க் அவுட் ஆகுது...! 'லைசன்ஸ் வாங்கி இங்கேயே பண்ண போறோம்...' - இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களிடத்தில் பரிசோதித்து பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது.18 முதல் 55 வயது வரை உள்ள நல்ல ஆரோக்கியமான 1077 மனிதர்களை தேர்வு செய்து பரிசோதிக்கப்பட்டனர்.
அதில், தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கான நல்ல பாதுகாப்பு கிடைத்துள்ளது. தடுப்பூசி போடப்பட்டு 56 நாள்களுக்கு பிறகு வைரஸை எதிர்த்து உடலில் போராடும் ஆன்டிபாடி மற்றும் டி செல்கள் அதிகரித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள்' தி லான்செட்' மருத்துவ இதழில் தெரிவித்துள்ளனர். உடலில் உள்ள டி செல்கள்தான் கொரோனா போன்ற வைரஸ்களை எதிர்த்து போராட முக்கிய பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்ககது.
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி மருந்தை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்க உள்ளது. உலகிலேயே அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்வது சீரம் இன்ஸ்டிடியூட்தான். ஏற்கெனவே, ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தடுப்பூசி சோதனை வெற்றி அடைந்ததும் புனே சீரம் நிறுவனத்துடன் இணைந்து அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்வோம் என்று கூறியிருந்தது.
இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், ''ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி குறித்து நல்ல விதமான செய்தி கிடைத்துள்ளது. இந்தியாவிலும் பரிசோதனைகளை நடத்த ஒரு வாரத்துக்குள் விண்ணப்பிக்க இருக்கிறோம். மிக விரைவிலேயே அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவிலும் சோதனைகளை தொடங்கி, விரைவிலேயே அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்வோம் '' என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'விமான' நிலையங்களையும் ஆக்கிரமித்த நோய் 'எதிர்ப்பு' சக்தி உணவுகள்... டெல்லிக்கு 'மஞ்சள்' பால் அப்போ சென்னைக்கு?
- மதுரையில் குறைகிறதா கொரோனா பாதிப்பு!? தூத்துக்குடியில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று!.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன?
- கொரோனா 'சென்னை'யில் குறைந்து... மற்ற மாவட்டங்களில் 'அதிகரித்த' காரணம் என்ன?
- கொரோனா தடுப்பு பணிக்காக... 'சென்னை'யில் இதுவரை செலவு செய்யப்பட்ட தொகை... எத்தனை 'கோடி'கள் தெரியுமா?
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பதறவைக்கும் பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- கொரோனா வார்டுக்கு விசிட் செய்து... 'சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ்' கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்... நெகிழ்ந்துபோன நோயாளிகள்! - நடந்தது என்ன?
- 'கதறிய இளைஞர்'... 'எந்த ஒரு மகனுக்கும் இப்படி ஒரு கொடூரம் நடக்கக் கூடாது'... இதயத்தை நொறுக்கிய சம்பவம்!
- 'உன்ன கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன்னு சொன்னேன்ல'... 'நிறைமாத கர்ப்பிணிக்காகக் கணவன் எடுத்த ரிஸ்க்'... எதிர்பாராமல் நடந்த திருப்பம்!
- 'சென்னையில் ஆச்சரியம்'... 'ஞாயிற்றுக்கிழமை வெளியே வந்தால் இதுதான் நடக்கும்'... நேப்பியர் பாலத்தில் மாஸ் காட்டும் நாய்!
- “போடுறா வெடிய!.. நான் ஆடியே தீரணும்!”.. ரோட்டில் இருந்து குத்தாட்டம் போட்டபடியே தாயை வரவேற்ற இளம் மகள்!