"சும்மா குடுத்தாலும் வேணாம்..." "ஆள விடு சாமி..." இது என்னடா 'கோழிக்கறிக்கு' வந்த சோதனை... 'கோழிப்பண்ணை' உரிமையாளர்கள் 'வாழ்வில்'... 'கொரோனா' நிகழ்த்தும் 'கோரத்தாண்டவம்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலம் நகரி அருகே கொரோனா வைரஸ் பீதி காரணமாக பொதுமக்கள் கோழிக்கறியை இலவசமாக கொடுத்தாலும் வாங்க மறுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஆந்திராவில் கோழிக்கறி விலை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை வீழ்ச்சி அடைந்துவிட்டது. அந்த விலைக்கு வாங்க ஆளில்லாததால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கடும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தநிலையில் கிருஷ்ணா மாவட்டம் மைலவரம் மண்டலத்திற்குற்பட்ட கிராமம் ஒன்றில், குவ்வலகுமார் ரெட்டி என்ற கோழிப்பண்ணை உரிமையாளர் சுமார் 2000 கோழிகளை அருகில் உள்ள கிராமத்தினருக்கு இலவசமாக வழங்க கொண்டு சென்றார்.

இதையடுத்து கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட கோழிகளை அவர்கள் வாங்க மறுத்துள்ளனர். கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாக் கூறி கிராமத்தினர் கோழிகளை வாங்க மறுத்து விட்டனர். அதனால் அந்த கோழிகளை என்ன செய்வதென்று தெரியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.

விலை வீழ்ச்சி மட்டுமின்றி விற்பனையும் குறைந்து விட்டதால் கோழிகளுக்கு போடும் தீனிக்கு கூட கட்டுப்படியாகவில்லை எனத் தெரிவித்த அவர், தனக்கு ஒரே வாரத்தில் ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

ANDRA, POULTRY, OWNER, FREE CHICKEN, PUBLIC REFUSAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்