'வேலை போகும்ன்னு அப்பவே சொன்னோம்'...சத்தமில்லாமல் நடந்த மூடு விழா'...வெளியான அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு முழுவதிலும் 3,400 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது. 

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திரசேகர் கவுத், இதுவரை எத்தனை வங்கியின் கிளைகள் மூடப்பட்டுள்ளன என்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், இந்தியாவில் உள்ள 26 பொதுத் துறை வங்கிகள் 2014-15 முதல் 2018-19 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மொத்தம் 3,427 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட மொத்த வங்கிக் கிளைகளில் 75 சதவீத வங்கிக் கிளைகள் (2,568) இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமாகும்.014-15ஆம் ஆண்டில் 90 கிளைகளும், 2015-16ஆம் ஆண்டில் 126 கிளைகளும், 2016-17ஆம் ஆண்டில் 253 கிளைகளும், 2017-18ஆம் ஆண்டில் 2,083 கிளைகளும், 2018-19ஆம் ஆண்டில் 875 கிளைகளும் மூடப்பட்டுள்ளன.

வங்கிகள் இணைப்பை மத்திய அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த முயற்சியினால் வேலையிழப்புகள் ஏற்படும் என தொழிற்சங்கங்கள், ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தன. இந்நிலையில் மூடப்பட்ட வங்கிக் கிளைகள் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BANK, RTI, PUBLIC SECTOR BANKS, MERGED, CLOSED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்