எங்கையா...? நான் 'ஆர்டர்' பண்ண 'பொருள' காணோம்...! - கடைசியில என்ன இப்படி 'டீ' போட வச்சுட்டீங்களேப்பா...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு சில நேரங்களில் அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக தவறுதலாக வேறொரு பொருளை வைத்து அனுப்புவது தொடர்கதையாகி வருகிறது.

அதேபோன்று, இப்போது டெல்லியைச் சேர்ந்த விக்ரம் பார்கோஹெய்ன் என்பவர் அமேசான் ஆன்லைன் ஆப்பில் பொம்மை கார் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

பொம்மை கார் புக்கிங் செய்த விக்ரமுக்கோ பார்சலில் பார்லேஜி பிஸ்கட் இருந்துள்ளது. இதைப் பார்த்த விக்ரமோ என்னடா இது நாம புக் செய்தது வரவில்லையே என தனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவத்தை நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

அதில், 'நான் அமேசான் தளத்தில் பொம்மை கார் ஒன்றை ஆர்டர் செய்திருந்த எனக்கு பார்லே ஜி பிஸ்கட் வந்துள்ளது. பொம்மை காரை பார்க்கலாம் என மகிழ்ச்சியாக பார்சலை ஓபன் செய்து பார்த்தபோது ஏமாற்றமே எனக்கு மிஞ்சியது.

அதோடு அமேசான் எனக்கு ஒரு வேலையையும் வைத்துள்ளது. பார்சலில் வந்த பிஸ்கட்டுக்காக டீ போட வேண்டியதாகியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

விக்ரமின் இந்த கூலான பதிவுக்கு பலர் நகைச்சுவையாக ரிப்ளே பதிவு செய்தனர்.

மேலும், அமேசான் நிறுவனத்துக்கு புகார் அனுப்பிவிட்டதாகவும் பணம் திரும்பவும் செலுத்தும் நடைமுறை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தவறான பொருட்கள் வந்ததற்காக அமேசான் நிறுவனம் வருத்தம் தெரிவித்ததாகவும் விக்ரம் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்