‘ஒன்லி ரசகுல்லா மட்டும்தான்.. ஒரு ஓட்டு கூட கெடைக்காது.. ஹோக்கே?’.. மோடியை சாடிய மம்தா!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘ரசகுல்லா வேண்டுமானால் தருவோம்.. ஆனால் ஓட்டு போட மாட்டோம்’என்று மறைமுகமாக பிரதமர் மோடியை சாடியுள்ளார்.

இந்திய பாரத பிரதமர் மோடி சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு அளித்த சிறப்பு பேட்டியில், அரசியல் அல்லாத தனது தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் அரசியல் உறவுகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், என்னதான் எதிரும் புதிருமாக தானும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இருந்தாலும் கூட அரசியல் நாகரீகம் கருதி மம்தா பானர்ஜி வருடாவருடம் தனக்கு குர்தாவும் இனிப்புகளையும் அனுப்பி வைப்பார் என்று மனம் நெகிழ்ந்து கூறியிருந்தார்.

மேலும், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெகாவிலிருந்து தனக்கு ஒவ்வொரு வருடமும் இனிப்புகள் அனுப்புவார் என்று தெரிய வந்த பிறகே, மம்தா பானர்ஜியும் மோடிக்கு இனிப்புகளை அனுப்பி வைக்கத் தொடங்கியதாக மோடி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜி, தற்போது ஹூக்ளி மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள சென்றபோது பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அவர் சொன்ன பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்போது மோடி அளித்த பேட்டி பற்றி மம்தா பானர்ஜியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, இதற்கு பதில் அளிக்கும் விதமாக மம்தா பேனர்ஜி,  ’வருடாவருடம் நான் பண்டிகை நாட்களில் பலருக்கும் ரசகுல்லா உள்ளிட்ட இனிப்பு வகைகளை அனுப்புவது உண்டு’ என்று கூறியவர், ‘ஆனால், இது போன்று ரசகுல்லாவை மட்டுமே அனுப்ப முடியும்’என்றும் ‘அவ்வாறு சொல்பவர்களுக்கு (மோடி) ஒரு ஓட்டு கூட போடமாட்டோம்’என்றும் பிரதமர் மோடியை மறைமுகமாக சாடியுள்ளார்.

NARENDRAMODI, BJP, INTERVIEW, WEST BENGAL, MAMATA BANERJEE, AKSHAYKUMAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்