‘ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவால்’... ‘மருத்துவ மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்ட 10 பேருக்கு வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், உணவை விற்பனை செய்த உணவகத்துக்கு அதிகாரிகள் சீல்வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி காமராஜர் சாலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு எதிரே ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த ஒருவர், உணவகத்தை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிறு அன்று ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 10 மாணவர்கள், ஆன்லைன் மூலம் இந்த உணவகத்தில் சிக்கன் ஷாவர்மா மற்றும் பிரியாணி வாங்கி, சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி தன்வந்தரி போலீசார் வழக்கு செய்தனர்.

இந்நிலையில் தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, உணவு மாதிரிகள், மசாலாக்களை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் ஆய்வின் முடிவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PUDUCHERRY, ONLINE, MEDICAL, STUDENTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்