'சாமி சாமி' பாடலுக்கு ஸ்டெப் போட்டு திகைக்க வச்ச Fire பாட்டி.. ராஷ்மிகா பாத்தா ஷாக் ஆகிடுவாங்க.. இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புஷ்பா படத்தில் வரும் பிரபல 'சாமி சாமி; பாடலுக்கு வயதான மூதாட்டி ஒருவர் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

'சாமி சாமி' பாடலுக்கு ஸ்டெப் போட்டு திகைக்க வச்ச Fire பாட்டி.. ராஷ்மிகா பாத்தா ஷாக் ஆகிடுவாங்க.. இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ..!
Advertising
>
Advertising

Also Read | மக்களுடன் தலைகீழா தொங்கிய ரோலர் கோஸ்டர்.. Prank-னு நெனச்சவங்களுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..

புஷ்பா

பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனின் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவந்து வெற்றிபெற்ற இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். ஆந்திரா பகுதியில் விளையும் அரிய வகை மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

சாமி சாமி

இந்தப் படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடல் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தின் நாயகியான ராஷ்மிகா பாடலில் ஆடிய நடனம் பலரையும் ஈர்த்தது என்றே சொல்லவேண்டும். இன்ஸ்டா ரீல்ஸ் துவங்கி, சமூக வலை தளங்களில் இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி வந்தனர். இந்நிலையில், இதே பாடலுக்கு மூதாட்டி ஒருவர் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

பார்ப்பதற்கு பந்தல் எல்லாம் அமைத்து ஏதோ மண்டபம் போல இருக்கும் இடத்தில் இந்தப் பாட்டி நடனமாடுகிறார். வயதான நிலையிலும் மிகவும் துடிப்புடன் இசைக்கு ஏற்றபடி ஸ்டெப் போட்டு நெட்டிசன்களை திகைக்க வைத்திருக்கிறார் இந்த Fire பாட்டி.

வைரல் வீடியோ

புஷ்பா படத்தின் சாமி சாமி பாடலுக்கு வயதான மூதாட்டி ஒருவர் நடனமாடும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை 59,000 பேர் பார்த்துள்ளனர். 4,900 பேர் இந்த வீடியோவினை லைக் செய்துள்ளனர். மேலும், "என்ன ஒரு எனெர்ஜி, என்ன ஒரு மூவ்" என்றும் "அருமையாக நடனம் ஆடுகிறார்" எனவும் நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

OLD WOMAN, PUSHPA, PUSHPA SIGNATURE STEPS, சாமி சாமி, பாட்டி, புஷ்பா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்