‘நான் பிறந்தபோதே இப்படி தான் இருந்தேன்’...‘மூடநம்பிக்கை கொண்ட அக்கம்பக்கத்தினரால்’... ‘மூதாட்டிக்கு நிகழும் சோகம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிறவியிலேயே குறைபாடுகளுடன் பிறந்த மூதாட்டி ஒருவர், தனது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரால், வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் கடப்பாடா கிராமத்தில் வசித்து வருபவர் குமாரி நாயக் (63). வயதான இந்த மூதாட்டி, பிறக்கும் போதே 12 விரல்கள் மற்றும் 20 கால் விரல்களுடன் பிறந்துள்ளார். இதனால் அப்போது முதலேயே, அக்கம்பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை வித்தியாசமாக பார்க்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வயதானப் பிறகும், வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியது உள்ளதால், வேதனை அடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘நான் பிறக்கும் போதே இதேபோன்று தான் பிறந்தேன். எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால், எனது உடலில் உள்ள இந்த மாற்றத்தை சரிசெய்ய, எந்த சிகிச்சையும் செய்ய முடியவில்லை. மூடநம்பிக்கை காரணமாக, எனது அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், என்னை சூனியக்காரி என்று நம்பி, என்னை விட்டு ஒதுங்கியுள்னர். சில நேரங்களில், இதை நினைத்து மிகுந்த வேதனையடைந்து, வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பேன். தற்போது 63 வயதாகும் நான், மற்றவர்களை போல, சாதரண வாழ்க்கை வாழமுடியவில்லை’ என்றார்.

மிகவும் இரங்கிய மனம் கொண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ‘இந்த கிராமம் சிறிய கிராமம் என்பதால், மக்கள் மூடநம்பிக்கையால் இதுபோல் செய்கின்றனர். மருத்துவத்தின் மூலம் இதை சரிசெய்யலாம் என்று தெரிந்தாலும், ஏழ்மையால், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார்’ என்று வருத்தம் தெரிவித்தார்.

POLYDACTYLY, OLD, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்