5 பிள்ளைகளும் கைவிட்டதால் விரக்தி?.. ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை அரசுக்கு உயில் எழுதிய முதியவர்!!
முகப்பு > செய்திகள் > இந்தியா உத்திரபிரதேசம் மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டம், பதானா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் நது சிங். இவருக்கு தற்போது 85 வயது ஆகிறது.
Images are subject to © copyright to their respective owners
இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நது சிங்கின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக உயிரிழந்து விட்டார். மேலும் அவரது மகள்கள் அனைவருக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
முதியோர் இல்லத்தில் சேர்ந்த நது சிங்
நது சிங்கின் மகன் சஹரன்பூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இதனிடையே மனைவியின் மறைவிற்குப் பிறகு நது சிங் தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மகன், மகள்கள் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் இருந்த போதிலும் தன்னை யாரும் கவனிக்காத காரணத்தினால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் ஒன்றிலும் நது சிங் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners
அப்படி இருக்கையில் முதியோர் இல்லத்தில் சேர்ந்த தந்தையை 5 பிள்ளைகளும் சந்திக்கவும் போகவில்லை என கூறப்படுகிறது. இத்தனை பேர் இருந்தும் தன்னை யாரும் பார்க்க வரவில்லை என்பதாலும் அவர்கள் வயது முதிர்வால் கைவிட்டதாலும் கடும் விரக்தியிலும் நது சிங் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான் மிகப் பரபரப்பான முடிவையும் நது சிங் எடுத்துள்ளது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையுமே உத்தரபிரதேச அரசுக்கு அவர் உயில் எழுதி வைத்துள்ளார்.
அரசுக்கு ஒன்றரை கோடி உயில்
மேலும் தன்னுடைய உயிலில், தனது மறைவிற்குப் பின்னர் கிராமத்தில் உள்ள வீடும், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தன் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை மாநில அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நது சிங் குறிப்பிட்டுள்ளார். அதே போல தன்னுடைய நிலத்தில் மாநில அரசு பள்ளிக்கூடம் அல்லது மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ள நது சிங், தனது இறப்புக்கு பின் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners
இத்துடன் தனது மகன் மற்றும் நான்கு மகள்களும் தன்னுடைய இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்றும் உயிலிலே அவர் எழுதி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நது சிங் மாநில அரசுக்கு தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைத்துள்ள சூழலில் இது தொடர்பாக பேசிய சார் பதிவாளர், நது சிங் சொத்துக்கள் அவரது மறைவுக்கு பின் மாநில அரசின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.
5 பிள்ளைகள் இருந்தும் தன்னுடைய 85 வது வயதில் முதியோர் ஒருவர் எடுத்துள்ள முடிவு தற்போது நாடெங்கிலும் பேசு பொருளாக மாறி உள்ளது.
மற்ற செய்திகள்
பிறந்த நாளை முன்னிட்டு எளிய மாணவர்கள் படிப்புக்கு நிதி அளித்த விஐடி கல்விக் குழும உதவி துணை தலைவர்.!
தொடர்புடைய செய்திகள்
- காதலனுக்கு Good Bye.. 54 வயசு முதியவரை திருமணம் செய்த இளம்பெண்.. இப்ப இப்படி ஒரு சிக்கலா.?
- "என் மகனா நீ கிடைக்க என்ன புண்ணியம் செஞ்சேனோ?".. 100 வயது தந்தையை நெகிழ வெச்ச 70 வயசு மகன்.. கண்கலங்க வைக்கும் வீடியோ!!
- "40 வருஷமா Waiting".. கைவிடாத முதியவருக்கு 88 வயதில் அடித்த அதிர்ஷ்டம்.. ஒரே இரவில் கோடீஸ்வரர்!!
- "இத்தனை வருஷம் கூட இருந்து பாசமா பாத்துக்கிட்டா".. மறைந்த மனைவி.. "இரண்டு குழி தோண்டுங்க".. சோகத்தில் முடிவு எடுத்த முதியவர்!!
- 98 வயசுல விடுதலையான தாத்தா.. கூட்டிக்கிட்டு போக யாருமே வரலைன்னு.. ஜெயில் அதிகாரிகள் எடுத்த முடிவு.. நெகிழ்ச்சி வீடியோ..!
- நண்பருக்கு பெண் பாக்க போன இடத்தில்.. 78 வயது முதியவருக்கு மலர்ந்த காதல்.. திருமணத்தில் முடிந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
- வயிற்றுக்குள் எப்படி 187 நாணயங்கள்..? X Ray-வில் தெரியவந்த உண்மை.. ஆச்சரியத்தில் உறைந்த மருத்துவர்கள்.!
- நூறு நாள் வேலை பாத்துக்கிட்டே குரூப் 2 தேர்வில் சாதிச்ச 55 வயது "பார்வை மாற்றுத்திறனாளி".. குவியும் பாராட்டுகள்.
- 70 வயது நபரின் மனைவிக்கு 19 வயசு.. "வாக்கிங் போன இடத்தில் பாட்டு பாடி இம்ப்ரஸ் பண்ண 50'ஸ் கிட்..
- "வா டான்ஸ் ஆடலாம்".. ஓடும் ரயில்ல Thug Life சம்பவம் செஞ்ச தாத்தா.. பாட்டி எடுத்த ஸ்வீட் ரிவெஞ்ச்.. வைரலாகும் Cute வீடியோ..!