"வயசானவரு, ஹெல்ப் கேக்க கூப்பிட்டாருனு நினைச்சோம்"... "ஆனா அவரோட மனசு இருக்கே"... முதியவர் செய்த நெகிழ்ச்சி செயல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசு ஊரடங்கை மே மாதம் மூன்றாம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பலர் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக அரசுகள் மற்றும் பல நல்ல உள்ளம் படைத்த மக்கள் மற்றவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 82 வயதான சுபாஷ் சந்திரா என்பவர் கொல்கத்தா பகுதியில் தனியாக வசித்து வருகிறார். ஒய்வு பெற்ற பேராசிரியரான இவர், தனது வீட்டின் அருகில் பணியில் இருந்த போலீசாரை அழைத்துள்ளார். வயதானவர் என்பதால் ஏதேனும் உதவி செய்ய அழைத்திருப்பார் என போலீசார் கருதிய நிலையில் அந்த முதியவர், கையில் பத்தாயிரத்திற்கான காசோலை ஒன்றை நிரப்பி வைத்துக் கொண்டு இதனை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்ப முடியுமா என கேட்டுள்ளார்.
அது மட்டுமில்லாது, ஆன்லைனில் எனக்கு பணம் அனுப்ப தெரியாது என்பதால் உங்களை அழைத்தேன். உங்களை சிரமப்படுத்தியதற்கு என்னை மன்னித்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட அது நெட்டிசன்களிடையே வைரலானது.
தனது முதுமை காலத்திலும் தன்னால் முடியும் உதவியை செய்ய நினைத்த சுபாஷ் சந்திராவின் பெருன்பான்மையை அறிந்து அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "உனக்கு கொரோனா வர..." நீதிபதியை பார்த்து சாபமிட்ட வழக்கறிஞர்... அதிர்ந்து போன நீதிபதியின் அதிரடி உத்தரவு...
- சுடர்விடும் 'வெளிச்சம்'... கொரோனாவின் 'கோரப்பிடியில்' இருந்து... சகோதரியுடன் சேர்ந்து தப்பிய '9 மாத' பெண்குழந்தை!
- 'உலகமே நம்ம மேல காண்டுல இருக்கு'... 'இதுல நீங்க வேற'...சீன இளைஞருக்கு கிடைத்த அதிரடி தண்டனை!
- 'உலக சுகாதார மையத்தையே அதிரச் செய்த மாஸ்க்...' 'அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சவால்...' "இதைதாண்டி கொரோனா உள்ள போயிடுமா?..." 'யாருகிட்ட...!'
- ‘என் ஏரியால 15 பேருக்கு கொரோனா இருக்கு!’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்!’
- 'வேகமாக' பரவும் கொரோனா... மத்திய அரசு 'உத்தரவால்'... தயார் நிலையில் ராணுவம்!
- "இவருதான் உலகத்தையே ஒரு வழி பண்ணவரு..." "அக்யூஸ்டின் துல்லிய புகைப்படம் இதுதான்..." 'புகைப்படத்தை' வெளியிட்டது 'ஃபிரான்சின்' 'INSERM நிறுவனம்...'
- “எனக்கு கொரோனா இருந்தா உங்களுக்கும் பரவட்டும்!”.. காரை நிறுத்திய போலீஸாரின் கிட்டே வந்து பெண் செய்த ‘பதறவைக்கும்’ சம்பவம்!.. வீடியோ!
- கொரோனாவால் 'டேட்டிங்' ஆப்களில்... அலைமோதும் இளைஞர்கள்... 'அந்த' ஆப்-க்கு தான் மவுசு அதிகமாம்!
- இந்தியாவில் 'கொரோனா' சோதனை... 'அதிகம்' நடத்திய மாநிலங்கள் இவைதான்... 'தமிழ்நாட்டுக்கு' எத்தனாவது இடம்?