1400 ஊழியர்கள் பணி நீக்கம்...! 'பிரபல கால் டாக்சி நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு...' நாங்க பெரிய நஷ்டம் அடைஞ்சுருக்கோம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளில் பல அவற்றின் ஊழியர்களின் சம்பளத்தை பகுதி அளவு குறைத்தும், ஒரு சில நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தும் வருகிறது.

ஸ்மோடோ, ஸ்விக்கி, உபர் போன்ற தனியார் நிறுவனங்களை தொடர்ந்து ஓலா நிறுவனமும் ஊரடங்கு காரணமாக முதலில் சுமார் 1400 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

மேலும் உலகளவில் வாகன போக்குவரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் ஓலா நிறுவனம் தற்போது கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் மிகப் பெரிய நஷ்டத்தினை சந்திருப்பதாகக் கூறியுள்ளது.

இதுகுறித்து ஓலா நிறுவனம் சார்ந்து கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'கொரோனா பரவல் காரணமாகக் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ஓலா நிறுவனத்தின் வருவாய் 95 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும், இதனால் ஓலா நிறுவனத்திலிருந்து இந்த வார இறுதிக்குள் 1400 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

முதற்கட்டமாகப் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஓலா வாகன பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருக்கின்றனர். பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் அறிவிப்பு காலத்திற்கான 3 மாத சம்பளம் வழங்கப்படும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் மருத்துவக் காப்பீட்டுத் தொகை, விபத்துக் காப்பீட்டுத் தொகை மற்றும் பணியாளர்களின் பெற்றோருக்கான காப்பீட்டுத் தொகை (2 லட்சம் வரை) உள்ளிட்டவற்றை டிசம்பர் 31 ஆம் தேதி வரை தொடர முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்