'மோடியின் ஹெலிகாப்டரை செக் பண்ணணும்'...சோதனையிட்ட அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரியை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டதுள்ளது.இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலுக்காக மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அந்தவகையில் நேற்று முன்தினம் பரப்புரைக்காக ஒடிசா மாநிலத்தின் சாம்பல்பூர் சென்றிருந்தார். அப்போது மோடி ஹெலிகாப்டரை விட்டு இறங்கியதும், அவர் சென்ற ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.ஆனாலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள்.
இதனிடையே இந்த விவகாரம் பரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து, மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட தேர்தல் அதிகாரியிடம், தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒரு நபர் அமைப்பு விசாரணை நடத்தியது.விசாரணையின் முடிவில் பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி முகமது மொஹ்சினை இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,தேர்தல் ஆணையத்தின் சோதனை சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அந்த வீதியை மொஹ்சின் மீறியுள்ளார் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.முன்னதாக சாம்பல்பூரில் அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் ஹெலிகாப்டர்கள் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ’தமிழ்நாடுனா வேற ஒரு நாடுன்னு நெனைச்சுக்குறீங்க.. அகந்தையில வெச்சிட்டாங்க.. அதோட பேரு இதான்’!
- ‘வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு’.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- 'அது எப்படி எதிர்க்கட்சித் தலைவருங்க பத்தி மட்டும் வருமான வரித்துறைக்கு துப்பு கிடைக்குது’.. ப.சிதம்பரம் ட்வீட்!
- ‘இந்த ஏரியா மக்கள் காலையிலே போய் ஓட்டு போடுங்க.. கனமழை இருக்கு’..வெதர்மேன் அலெர்ட்!
- ‘10 பேர் டீமா போங்க.. 2 பேர் போலீஸ் வருதான்னு பாருங்க..’.. பணப்பட்டுவாடா வீடியோவால் பரபரப்பு!
- 'வழி அனுப்ப வந்தவனையே'...'வழி அனுப்பி விடுறதுனா',இது தானா'?...கொதிப்பில் வேட்பாளர்!
- ‘யாருக்கு ஓட்டு போடுறீங்க.. மோடி கேமரா பிக்ஸ் பண்ணியிருக்காரு.. ஜாக்கிரத’..பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!
- ‘ஆளுங்கட்சியினர் ரூ.2000 நோட்டு கொடுக்கும் வீடியோக்கள்.. ஏன் நடவடிக்கை இல்லை?’ ஸ்டாலின் அதிரடி கேள்வி!
- 'கனிமொழி வீட்டில் எதுவும் கெடைக்கல.. ஆனா ரெய்டு போனது ஏன் தெரியுமா?’.. சத்யப்பிரதா சாஹூ!
- அதிக பணப்பட்டுவாடா.. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து.. ஸ்டாலின் ஆவேசம்!