பிரபல ஒடியா நடிகர் மரணம்.. "கடைசியாக மனைவி, மகள்களுக்கு மெசேஜ்.." பிரேத பரிசோதனை சொல்வது என்ன??.. வெளியான பரபரப்பு தகவல்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரபல ஒடியா நடிகரான ராய்மோகன் பரிடா, தனது உயிரை மாய்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது இதற்கான காரணம் பற்றி தகவல் ஒன்று வெளி வந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "அக்னிபத்'ல வேலைக்கு போனா, பசங்களுக்கு கல்யாணம் நடக்கிறதே கஷ்டம்.." மேகாலயா ஆளுநரின் பரபரப்பு கருத்து

ஒடியா மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் அதிகம் ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் ராய்மோகன் பரிடா.

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ராய்மோகன், திடீரென கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

கடைசியாக மனைவி, மகளுக்கு மெசேஜ்

தான் இறப்பதற்கு முன்பாக, மனைவி மற்றும் இரண்டு மகள்களின் மொபைல் எண்ணிற்கு, 'Bye' என மெசேஜ் அனுப்பி விட்டு இந்த முடிவை எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றது. தன்னுடைய வீட்டின் அறையில், தூக்கில் ராய்மோகன் கிடந்ததைக் கண்டு அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து, ராய்மோகன் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் அவரது மரணத்தின் காரணத்தை அறிய விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். ராய்மோகன் மறைவுக்கு, ஒடியா, பெங்காலி திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வந்தனர்.

மரணத்திற்கான காரணம் என்ன?

இந்நிலையில், ராய்மோகனின் பிரேத பரிசோதனை குறித்து சில தகவல்கள் தற்போது வெளி வந்துள்ளது. அப்படி வெளியான தகவல்களின் அடிப்படையில், நடிகர் ராய்மோகன் தூக்கில் தொங்கிய போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது உறுதியானது. அதே போல, தான் உயிரிழப்பதற்கு சில தினங்கள் முன்பில் இருந்தே கடும் மன அழுத்தத்தில் அவர் இருந்ததாகவும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இருந்தாலும், ராய்மோகனின் மறைவுக்கான காரணம் என்ன என்பது குறித்து சரிவர விவரங்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. அதே வேளையில், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்பது ஏறக்குறைய உறுதியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, ராய்மோகனின் மொபைல் போனை சோதனை செய்து வரும் போலீசார், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரையும் தொடர்ந்து விசாரணை வளையத்திற்குள் வைத்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | "ஒரு மீனோட விலை 13 லட்சமா??.." வாயடைத்து போன நெட்டிசன்கள்.. அப்படி என்ன தான் இருக்கு அதுல??

ODIYA ACTOR, ODIYA ACTOR RAIMOHAN PARIDA, RAIMOHAN PARIDA POSTMORTEM REPORT, ஒடியா நடிகர், ராய்மோகன் பரிடா

மற்ற செய்திகள்