Non Vegக்கு நோ.. "மீறி சாப்பிட்டா இதான் கதி".. காலம் காலமா Follow பண்ணும் கிராமம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு கிராமம் முழுவதிலுமுள்ள மக்கள் அசைவம் சாப்பிடுவதில்லை என்ற நிலையில் அதற்காக அவர்கள் சொல்லும் காரணம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | Video : "நீ ஒரு பெரிய ஆர்ட்டிஸ்ட்ன்னு".. சூறாவளி மாதிரி சுழன்ற 'SKY'.. "எங்க பந்து போட்டாலும் வெளிய தான்"..

சைவம், அசைவம் என பலரும் தங்களின் விருப்பத்திற்கேற்ப உணவுகளை உண்பது என்பது வழக்கமான ஒன்று தான்.

சிலருக்கு மீன், இறைச்சி உள்ளிட்ட உணவு வகைகள் பிடிக்காமல் போகும் பட்சத்தில் அவர்கள் சைவ உணவுகளை பின்பற்றுவார்கள்.

இது பலரின் தனிப்பட்ட விருப்பமாக தான் பெரும்பாலும் இருக்கும். ஆனால், அதே வேளையில் ஒரு கிராமமே அசைவ உணவு உண்ணாமல் இருக்கும்  பட்சத்தில் அதற்கு அவர்கள் சொல்லும் வினோத காரணம் தான் இணையவாசிகள் மத்தியில் அதிக கருத்துக்களை சம்பாதித்துள்ளது.

ஒடிஷா மாநிலம், தெங்கனல் மாவட்டத்தில் பென்டசாலியா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒரு வினோத பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். அதாவது காலம் காலமாக அசைவ உணவுகளை இங்குள்ளவர்கள் உண்ண மாட்டார்கள் என்பது தான். அசைவ உணவு சாப்பிட்டால் பாம்பு அவர்களை கடித்து விடும் என்ற நம்பிக்கையில் இதனை பின்பற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி பேசும் ஊர் மக்கள், தங்களின் நம்பிக்கையை மீறி யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் அவர்களுக்கு கண் பாதிப்பு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் வந்து விடும் என்று முன்னோர்கள் குறிப்பிட்டதாகவும், அதனால் இந்த பழக்கத்தை தீவிரமாக பின்பற்றி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அப்படி யாராவது தவறுதலாக அசைவ உணவை சாப்பிட்டு விட்டால் உடனடியாக கோவிலுக்கு சென்று அங்குள்ள சாமியாரிடம் பூஜை செய்து விட்டு திரும்புவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கூட அசைவு உணவு வகைகள் இடம்பெறாது என கூறப்படுகிறது.

மேலும் அந்த கிராமத்தில் உள்ள வயதான நபர்கள் இது பற்றி தெரிவிக்கையில், அசைவ உணவுகளை சாப்பிட்டால் சபாம்பு கடிக்கவோ அல்லது உடல்நல பாதிப்பு ஏற்படவோ வாய்ப்பு இருப்பதால் சிறு வயதில் இருந்தே இதனை பின்பற்றி வருவதாகவும், இதன் காரணமாக அசைவ உணவுகள் மீது வெறுப்பு உருவாகி அதனை முற்றிலுமாக நிராகரித்து விட்டோம் என்றும் தெரிவிதுள்ளார்.

பல ஆண்டுகளாக அசைவ உணவுகளை தவிர்த்து வரும் கிராம மக்கள், அதற்கு சொல்லும் வினோத காரணம் தற்போது அதிகம் வைரலாகியும் வருகிறது.

Also Read | Kamal Haasan : "ஒரு நாடா இருக்குறது பிரச்சனை தான்.. ஆனா தூண்டிவிட்டது யாரு.?".. Bigg Boss ல் கமல் பரிந்துரைத்த புத்தகம்.!

ODISHA, ODISHA PEOPLE, VILLAGE, EAT, VEGETARIAN, SNAKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்