அமைச்சர் மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு.. திறப்பு விழாவுக்கு வந்தபோது நடந்த விபரீதம்.. பதைபதைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசா மாநிலத்தில் அரசு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அவர் மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "இவங்க நம்பர் அனுப்புங்க".. ஒரே வீடியோவில் ட்ரெண்டான பெண்.. உதவி செய்ய காத்திருக்கும் நடிகர் சோனு சூட்..!
ஒடிசா மாநிலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தவர் நபா கிஷோர். இவர் பிரஜ் ராஜ் நகர் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான புதிய அலுவலகங்களை திறந்து வைப்பதற்காக நேற்று காரில் சென்று இருக்கிறார். விழா நடைபெறும் இடத்திற்கு வந்த கிஷோர் காரில் இருந்து இறங்கிய நேரத்தில் திடீரென அங்கே துப்பாக்கி சத்தம் கேட்டிருக்கிறது. இந்த குழப்பத்திற்கு மத்தியில் அமைச்சர் திடீரென சரிந்து விழவே சூழ்நிலையை உணர்ந்த பொதுமக்கள் அவரை தாங்கிப் பிடித்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
அவரது உடலில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை அபாயகரமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து உயிர்க் காக்கும் சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் மொத்த மாநிலமும் பரபரப்பில் உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இந்த நிகழ்வு மிகவும் அதிர்ச்சி தருவதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து உயர்நிலை அளவில் விரிவான விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
விழா நடைபெறும் இடத்தில் நின்று இருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அமைச்சரை துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறை அதிகாரிகள் இடத்தில் ஒப்படைத்து இருக்கின்றனர். விசாரணையில் அவர் காந்தி சவுக் புறக்காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி துணை காவல் ஆய்வாளர் கோபால் கிருஷ்ண தாஸ் என்பது தெரிய வந்திருக்கிறது.
61 வயதான கிஷோர் ஒடிசாவின் ஜர்சுகுடா தொகுதியில் 3 முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்த ஒடிசா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Dr.Sharmika : “தப்பு தான்.. மன்னிச்சிடுங்க.. அது ஹியூமன் எரர்.. நானும் மனுஷிதானே?”.. குலோப் ஜாமூன் சர்ச்சை குறித்து டாக்டர் ஷர்மிகா.!
- Dr. Sharmika : “பெண்ணை கொச்சைப்படுத்துறேனா?”.. நுங்கு controversy-க்கு விளக்கமளித்த டாக்டர் ஷர்மிகா.!
- விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்.. உடல்நிலை & அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர் அளித்த தகவல்! முழு விவரம்
- VIDEO: "லத்தி, துப்பக்கி எப்பவுமே கார்ல இருக்கும்.. இறங்கி அடிச்சாப்றம்தான் அவன் ரவுடினு தெரிஞ்சுது" - சினிமாவை மிஞ்சும் ஆக்ஷன் சம்வங்கள் பண்ணிய விஜயகுமார் IPS | Exclusive
- நவீன மருத்துவ முறை மூலம் இதய துடிப்பு பிரச்சனைகளை குணப்படுத்தும் காவேரி மருத்துவமனை
- Andrew Flintoff: விபத்தில் சிக்கிய கார்.. ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரு ஃபிளிண்டாஃப்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- கல்லூரி மாணவியாக நடித்து அண்டர்கவர் ஆபரேஷன்..! விஜய், அஜித் பட பாணியில் பெண் POLICE தெறி சம்பவம்..
- ஆப்ரேஷனின்போது Football மேட்ச் பார்த்த நோயாளி.. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி கமெண்ட்..!
- X-Ray தானே எடுத்துட்டா போச்சு.. ஹாஸ்பிட்டல் ஊழியர்களையே ஆச்சர்யப்பட வச்ச யானை.. கியூட்டான வீடியோ..!
- VIDEO: "அந்த சிகிச்சை செலவு ₹ 5 கோடி".. வாழ்நாளை எண்ணும் மகளுக்காக மன்றாடும் சென்னை பெற்றோர்..! உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர்கள்..