"கால்சியம், வைட்டமின்'னு ஏகப்பட்ட சத்து இருக்காம்ல.." திடீரென வைரலாகும் சிவப்பு எறும்பு 'சட்னி'..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நம்மைச் சுற்றி இருக்கும் மரங்களில், செவ்வெறும்பு அதிகம் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதே போல, இந்த எறும்பைக் கண்டாலே, பலரும் சிறிதாக அச்சம் கொள்வார்கள்.

Advertising
>
Advertising

இதற்கு காரணம், அந்த செவ்வெறும்பு கடித்தால் ஏற்படும் வலியும், வீக்கமும் தான். அப்படிப்பட்ட ஒரு எறும்பினை வைத்து, ஒடிஷாவிலுள்ள மலைப்பகுதி மக்கள் செய்யும் விஷயம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஒடிஷாவின் மயூர்பஞ்ச் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள மலை பகுதியில், கை என்ற ஒரு வகை நெசவு செவ்வெறும்பு காணப்படுகிறது.

எறும்பை கொண்டு சட்னி

இந்த எறும்பு வகையானது, தான் வாழும் மரத்தின் இலைகளை நெய்து ஒரு வீட்டை அமைக்கும் என்பதால் இதற்கு நெசவு செவ்வெறும்பு என்ற பெயர் உள்ளது. இந்த மலை பகுதியில் வாழும் பழங்குடி மக்கள், இந்த எறும்புகளை வைத்து துவையல் செய்து உண்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல், இந்த துவையலை அருகே உள்ள சந்தையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.

கடித்தால் அதிக வலி எடுக்கும் தன்மை கொண்ட இந்த செவ்வெறும்பில் இருந்து சட்னியா என சிலருக்கு கேள்வியும் எழலாம். ஆனால், அப்படி உருவாக்கப்படும் இந்த சட்னியில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது தான் இதன் சிறப்பம்சம். இலையினால் ஆன கூட்டை எடுத்து, அதனை தண்ணீரில் போட்டு, இலைகளை தனியே பிரித்த பின்னர், அதிலுள்ள எறும்புகளை இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பு உள்ளிட்ட பொருட்களை வைத்து, அரைத்து சட்னி ஒன்றை பழங்குடி மக்கள் உருவாக்குகின்றனர். மேலும், சிலர் அந்த எறும்பின் புழுக்களை பெரிதும் விரும்பி, பச்சையாகவும் சாப்பிடுகின்றனர்.

கை சட்னியின் மருத்துவ பலன்கள்

இந்த கை எறும்பு சட்னியில், புரதம், கால்சியம், இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம்,சோடியம், ஜின்க், தாமிரம், அமினோ ஆசிட்கள் இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவற்றில் இருந்து விடுபடவும், மூட்டுவலி, வயிற்று நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் இந்த கை சட்னியை மயூர்பஞ்ச் பழங்குடி மக்கள் சாப்பிடுகின்றனர்.

அதே போல, இந்த எறும்பினை கடுகில் குழைத்து, மருத்துவ எண்ணெயாகவும் பயன்படுத்துகிறார்கள். இப்படி மலை வாழ் மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கியமாக இருக்கும் இந்த கை சட்னியின் மருத்துவ குணத்தைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள், இதன் தயாரிப்பில் மேம்பாடு கொண்டு வந்து, புவிசார் குறியீடு வாங்க வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

RED ANT CHUTNEY, ODISHA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்