'ஒழுங்கா படிக்கல, இதெல்லாம் ஒரு மார்க்கா'?...'பிரம்பால் சுழற்றிய வார்டன்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குறைவான மதிப்பெண்கள் எடுத்ததாக கூறி, கல்லூரி மாணவன் ஒருவனை விடுதி காப்பாளர் மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒடிசாவில் உள்ள காந்தி அறிவியல் கல்லூரியில் விடுதி காப்பாளராக பணியாற்றி வருபவர் பீஷ்வாரஞ்சன் ரானா. இவரது பரிந்துரையின் பேரில் சில கல்லூரி மாணவர்கள் அந்த கல்லூரியில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவர்களின் படிப்பு குறித்து அவ்வப்போது கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்வில் அந்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. இது பீஷ்வாரஞ்சனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த மாணவர்களை காப்பாளர் பீஷ்வாரஞ்சன், பிரம்பால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய கல்லூரி முதல்வர் ''விடுதி காப்பாளர் மாணவர்கள் மீது மிகுந்த அக்கறையோடு தான் இருந்தார். இருப்பினும் மதிப்பெண் குறைவாக எடுத்த காரணத்தினால் இப்படி தாக்குவதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. இதுகுறித்து காப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

COLLEGESTUDENT, STUDENTS, ODISHA, HOSTEL WARDEN, THRASHING, POOR MARKS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்