"இப்படி கூடவா இருப்பாங்க.." தாயின் இறப்பிற்கு வராத மகன்கள்.. 4 கி.மீ தாயின் உடலை சுமந்து சென்ற மகள்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிஷா : தாயின் இறுதிச் சடங்கிற்காக மகன்கள் வராத காரணத்தினால், மகள்கள் சேர்ந்து, தாய்க்கு இறுதிச் சடங்கு செய்துள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
ஒடிஷா மாநிலம், பூரி நகரில் அமைந்துள்ளது மங்கல்காட் என்னும் பகுதி. அப்பகுதியைச் சேர்ந்த ஜதி நாயக் என்ற 80 வயது மூதாட்டி, சில தினங்களுக்கு முன் காலமானதாக கூறப்படுகிறது.
அந்த மூதாட்டிக்கு நான்கு மகள்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். தன்னுடைய ஆறு பிள்ளைகளுக்கும் சிறந்த முறையில் வாழ்க்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.
புறக்கணித்த மகன்கள்
மேலும், நான்கு மகள்களும், கணவரின் வீட்டில் வசித்து வருகின்றனர். இரு மகன்கள், தாயுடன் இல்லாமல், தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக, ஜதி நாயக் தன்னுடைய முதுமை காலத்தில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். மேலும், மகன்கள் இருவரும் தாயைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், சில மகள்களின் வீட்டிலும், ஜதி நாயக் அவ்வப்போது தங்கி வந்துள்ளார்.
மகள்கள் செய்த காரியம்
இதனிடையே, ஜதி நாயக் காலமான நிலையில், அக்கம் பக்கத்தினர், அவரின் குடும்பத்திற்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால், ஜதி நாயக்கின் இரண்டு மகன்களின் குடும்பத்தினர் மட்டும் தாயின் இறப்புக்கு வரவில்லை என கூறப்படுகிறது. மகன்கள் வராமல் புறக்கணித்த காரணத்தினால், அவரின் நான்கு மகள்களும் சம்பிரதாய நிகழ்வுகளை உடைத்து, தங்களின் தாய்க்கு இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.
தோளில் சுமந்த மகள்கள்
தாயின் உடலை, நான்கு மகள்களும் சேர்ந்து, தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களின் வீட்டில் இருந்து தகனம் செய்யும் இடம், 4 கி.மீ தொலைவில் இருந்துள்ளது. அத்தனை தூரமும், தங்களின் தோளிலேயே தாயின் உடலை மகள்கள் சுமந்து நடந்தே சென்றுள்ளனர். அதன் பிறகு, ஜதி நாயக்கின் உடலிற்கு இறுதி சடங்குக்குள் மேற்கொள்ளப்பட்டது.
நீ தான் என் புள்ள
ஜதி நாயக் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், தனது மருமகன்களில் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவரிடம், 'நீ தான் என் மூத்த மகன். என்னுடைய இரண்டு மகன்களில், ஒருவர் கூட என்னைக் கவனித்துக் கொள்ளவே இல்லை. அவர்கள் பல ஆண்டுகளாக என்னை பார்க்கக் கூட வரவில்லை' என தெரிவித்ததாக, சம்மந்தப்பட்ட மருமகன், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது.. வெளியான பரபரப்பு தகவல்..!
தங்களின் தாயின் இறப்பிற்கு வராமல் சொந்த மகன்களே புறக்கணித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியும் யாராவது இருப்பார்களா என்றும் பலர் அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எல்லாரும் சீக்கிரம் ஓடி வாங்க...! இது 'என்ன'னு தெரியுதா...? பார்க்க 'அது' மாதிரியே இருக்கு இல்ல...! எப்படி இந்த 'வடிவத்துல' ஆச்சு...? - குழம்பிய விவசாயிகள்...!
- எனக்கு 'யாரும்' இல்ல...! 'எல்லாரும் என்ன கைவிட்டுட்டாங்க...' உடைந்து நொறுங்கி போன 'பாட்டிக்கு' இருந்த ஒரே ஆறுதல்...! - அவங்க செய்த 'காரியத்தால்' நெகிழ்ந்து போன குடும்பம்...!
- உன்ன 'நம்பி' தானடா கூட வந்தேன்...! 'ஒரு மொபைல், ஒருவேளை சாப்பாட்டுக்காக...' 'கட்டுன மனைவி என்றும் பாராமல்...' - கணவன் செய்த 'நம்பிக்கை' துரோகம்...!
- 'ஒரு வருஷமா எல்லாரோட கண்ணுலையும் மண்ண தூவி...' 'வீட்டுக்கடியில பாதாள அறை அமைத்து...' - நெஞ்சை உறைய செய்யும் 'படுபயங்கர' செயல்...!
- 'திடீரென பந்தியில் இருந்து கட கடவென எழுந்து போன புதுமாப்பிள்ளை'... 'Sorry, இந்த கல்யாணம் நடக்காது'... 'பதறி போன பெண் வீட்டார்'... மணமகன் சொன்ன பகீர் காரணம்!
- 'நீங்க ரெஸ்ட் எடுங்க...' 'எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம்...' 'கொரோனா வார்டில் செவிலியர்கள் செய்த சேவை...' - பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்...!
- “படிப்பு முடிந்தும் பட்டய சான்றிதழை வாங்க பணம் இல்ல!”.. ‘நூறுநாள் வேலைக்கு போகும் மாணவி!’.. ‘கேள்விப்பட்டதும் நடிகை செய்த காரியம்!’
- “7.30க்கு க்ளாஸ் போகணும்.. ஆனா 7.40க்கு தான் பஸ் வருது.. கஷ்டமா இருக்கு!”.. 'ட்விட்டரில்' மாணவர் வைத்த 'கோரிக்கை'!.. ட்விட்டரிலேயே நடந்த 'நெகிழ வைக்கும்' சம்பவம்!
- “இந்த ஏரியாவுல வசிக்கும் குடும்பத்துல ஒருத்தருக்கு தலா ஒரு ஸ்மார்ட்போன்!”.. ‘மாநில’ முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
- ‘இங்கெல்லாம் பட்டாசு வெடிக்கத் தடை’... ‘திருச்சி, தூத்துக்குடியிலும்’... ‘பசுமை தீர்ப்பாயம் உத்தரவு’... 'காரணம் இதுதான்'!