சிவப்பு எறும்பு, கொரோனாவுக்கு வில்லனா...? 'அவங்க இத ரொம்ப வருசமா சாப்பிடுறாங்க, அதனால தான்...' - '3 மாசத்துக்குள்ள முடிவெடுக்க உத்தரவு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒடிசா, சட்டிஸ்கர், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் சிவப்பு எறும்பைக் கொண்டு தயாரிக்கப்படும் சட்னியை தங்கள் உணவுகளில் காலம்காலமாக உண்டு வருகின்றனர்.

சிவப்பு எறும்புகள் மற்றும் பச்சை மிளகாயை கொண்டு இந்த சட்னி தயாரிக்கப்படுகிறது. அடிக்கடி வரும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக இந்த சிவப்பு எறும்பு சட்னியை பழங்குடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த சட்னி கொரோனா வைரஸை எதிர்க்கும் செயல் திறனை கொண்டிருப்பதாக நயாதர் பதியால் என்னும் பொறியாளர் கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார். சிவப்பு எறும்பு சட்னியில் ஃபார்மிக் அமிலம், புரதம், கால்சியம், விட்டமின் பி12, துத்தநாகம் மற்றும் இரும்பு சத்துகள் காணப்படுவதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸை அளிக்கும் என கூறியிருந்தார்.

இதனால் ஒடிசா, மேற்கு வங்காளம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சிவப்பு எறும்பு சட்னியை உணவில் சேர்ப்போருக்கு கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு ஒடிஷா உயர்நீதிமன்றத்தில் பதியால் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்குமாறு ஆயுஷ் அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொரோனாவை அழிக்க உலகின் அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சிவப்பு எறும்பு சட்னியும் அந்த வரிசையில் சேருமா என்பது ஆய்வின் முடிவில் தான் தெரிய வரும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்