"ஊரடங்கால ரொம்ப நஷ்டம்... 'யூ டியூப்' பாத்து வங்கிக்கு ஸ்கெட்ச் போட்ட 'பிசினஸ்' மேன்..." இறுதியில் நிகழ்ந்த 'ட்விஸ்ட்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் சவுமியரஞ்சன் ஜனா. 25 வயதான இவர், அப்பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் ஊரடங்கு காரணமாக தனது வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, யூ டியூப்களில் வீடியோக்களைக் கண்டு வங்கிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி, புவனேஸ்வர் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இந்திய ஆகிய இரண்டு வங்கிகளில் இருந்து மொத்தம் 12 லட்ச ரூபாயை கடந்த மாதம் கொள்ளையடித்துள்ளார்.

தீவிர விசாரணைக்கு பின்னர், ஜனாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், கொள்ளையடிக்க பயன்படுத்திய பைக் மற்றும் பொம்மை துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சில தகவல்கள் தெரிய வந்தது. ஹெல்மெட் அணிந்து கொண்டு வங்கிக்குள் நுழையும் சவுமியரஞ்சன், அங்கிருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களை தனது கையில் இருந்த பொம்மை துப்பாக்கி கொண்டு மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

முதல் வங்கியில் பொம்மை துப்பாக்கியை அவர் பயன்படுத்தியிருந்த நிலையில், அதில் கொள்ளையடித்த பணம் கொண்டு புல்லட் மற்றும் துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார். அவர் திருட்டில் போது பயன்படுத்திய பைக் மற்றும் வங்கியில் கிடைத்த சில ஆதாரங்களை கொண்டு சவுமியரஞ்சனை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக, சவுமியரஞ்சன் இரண்டு வங்கிகளும் கிட்டத்தட்ட 19 லட்சம் ரூபாய் வரை லோன் எடுத்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக, வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில் தான் வங்கியில் இருந்து அடிக்க திட்டமிட்டு அந்த பணத்தை மீண்டும் வங்கிக்கே வந்து தனது லோன் பணத்தில் கொஞ்சம் அடைத்தும் சென்றுள்ளார்.

ஒடிஷா மாநிலத்தின் பல வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் ஊரடங்கு சமயங்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்