பிரபலங்கள் தான் 'Target'.. கணவர் வைக்கும் ரகசிய கேமரா??.. மனைவி பாத்த 'தில்லாலங்கடி' வேலை?!.. நாட்டையே அதிர வைத்த குற்றம்?!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அர்ச்சனா நாக் என்ற பெண் குறித்த புகார் தொடர்பான செய்தி, தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ந்து போக வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கடையை இடிக்கும்போது கண்டுபிடிக்கப்பட்ட குழி.. தோண்டி பார்த்துட்டு உறைஞ்சு போன ஊழியர்கள். இதுக்கு மேலயா இவ்ளோ வருஷம் கடை இருந்துச்சு..!

ஒடிஷா மாநிலத்தின் களஹண்டி என்னும் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ச்சனா நாக். தற்போது 25 வயதாகும் இவர், இத்தனை நாட்களாக செய்து வந்த விஷயம் தொடர்பான செய்தி, அனைவரையும்  கதிகலங்க வைத்துள்ளது.

அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்கள் மத்தியில் பழகி வந்த அர்ச்சனா, அவர்களை தனியாக வீட்டிற்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னர் அவர்களுடன் தனிமையில் இருப்பதை அர்ச்சனா வழக்கமாக கொண்டிருந்த நிலையில், அவரது கணவர் இது தொடர்பான வீடியோக்களை ரகசியமாக கேமரா வைத்து பதிவு செய்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இப்படி Honey Trap செய்து இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்றும் பிரபலங்களை அவர்கள் மிரட்டியும் வந்துள்ளனர்.

கொரோனா தொற்று பேரிடர் காலத்திலேயே இப்படி அவர் செய்து வந்ததாக கூறப்படும் நிலையில், தன்னிடம் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை மிரட்டி வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த Honey Trap'ல் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் இது தொடர்பாக புகார் அளித்துள்ள நிலையில், தீவிர விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு அர்ச்சனா நாக் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

இது தவிர, இன்னும் சில பெண்களையும் தவறான வேலைகளில் ஈடுபட வைத்த அர்ச்சனா, அவர்களையும் மிரட்டி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.  இது தொடர்பாக விசாரித்து வந்த போலீசார், அர்ச்சனா நாகை கைது செய்திருந்த நிலையில் அவரிடம் இருந்து செல் போன்கள், லேப்டாப், பென்டிரைவ், பாஸ்புக் உள்ளிட்ட பல பொருட்களையும் பறிமுதல் செய்திருந்தது.

முன்னதாக, கிராமத்தில் இருந்து வந்த அர்ச்சனா நாக், இப்படி மோசடி வேலைகளில் ஈடுபட்டு பணம் பறித்து பின்னர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தயாரிப்பாளர் புகாரால் இளம்பெண் ஒருவர் செய்து வந்த Honey Trap சம்பவம், பல பிரபலங்கள் மத்தியில் அதிர வைத்துள்ளது.

Also Read | "இன்னும் கொஞ்ச நாளுல".. Foriegn போக வேண்டிய பையன்.. இரவில் வந்த போன் கால்?.. காலையில் கிராம மக்கள் கண்ட அதிர்ச்சி!!

ODISHA, ARCHANA NAG, ARCHANA NAG CASE, CELEBRITIES, ENQUIRY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்