VIDEO: "நாங்கலாம் சேலை-ல குதிரையே ஓட்டுவோம்"…! சேலை கட்டிக்கொண்டு புல்லட் பைக், வோல்வோ பஸ் ஓட்டும் இளம்பெண்... வைரல் வீடியோக்கள் மூலம் லட்சத்தில் வருமானம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சேலையில் குதிரை சவாரி செய்து ஒடிசாவைச் சேர்ந்த பெண் இன்டர்நெட்டில் வைரலாகி உள்ளார்.

ஒரு ‘சேலை உடையணிந்த’ பெண் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு ஒடிசாவின் ஜஹால் கிராமத்தைச் சேர்ந்த மோனாலிசா என்ற பெண் பதில் கூறியிருக்கிறார். ஒரு வீட்டில் இருக்கும் பெண்ணிடம் எதிர்பார்க்காத அனைத்தையும் செய்கிறார். புல்லட் பைக் ஓட்டுவது முதல் டிரக் ஓட்டுவது வரை மோனாலிசா சேலை அணிந்துக்கொண்டே அனைத்தையும் செய்கிறார். சமீபத்திய வீடியோவில், அவர் குதிரை சவாரி செய்வது இன்டர்நெட்டில் ட்ரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் அதன் ஒவ்வொரு தருணத்தையும் நேசிக்கிறார்கள். முதலில் அவரது கணவர் பத்ரி நாராயண் பத்ராவின் யூடியூப் சேனலால் பகிரப்பட்ட இந்த வீடியோ, இப்போது ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மோனாலிசா, யூடியூபின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திய தனது கணவருக்கு நன்றி கூறுகிறார். படைப்பு இயக்குனரும், தொழிலில் சமூக சேவையாளருமான பத்ரி தான் இவரது அனைத்து யூடியூப் வீடியோக்களிலும் கேமராவுக்கு பின்னால் இருப்பவர்.

மோனலிசா இப்போது யூடியூபில் வீடியோக்களைப் பதிவேற்றுவதன் மூலம் மாதம் ரூ 1.5 லட்சம் சம்பாதிக்கிறார். மோனலிசாவின் வீடியோக்கள் பதிவேற்றப்பட்ட பத்ரியின் யூடியூப் சேனல் மே 2016-இல் உருவாக்கப்பட்டது, தற்போது 2 மில்லியனுக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது.

யூடியூப்பைத் தவிர, அவரது வீடியோக்கள் பெரும்பாலும் பிற சமூக ஊடக தளங்களிலும் பயனாளர்களால் பகிரப்படுகின்றன. அவர் ஒரு வோல்வோ பஸ் ஓட்டுவதை போன்ற  வீடியோக்களில் ஒன்று ஐ.ஏ.எஸ் அதிகாரி அவனிஷ் சரணால் ட்விட்டரில் பகிர்பட்டுள்ளது. மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றதால், சரணின் ட்வீட்டுக்கு நெட்டிசன்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.

வீடியோவுக்கு பதிலளித்த பல நெட்டிசன்கள் மோனாலிசாவைப் பாராட்டினர், பாரம்பரிய உடை அணிந்து இந்த செயல்களை செய்ததற்கு அவரை வாழ்த்தினர். இது தவிர, மோனாலிசா ஒரு விலங்கு காதலியாகவும், பெரும்பாலும் கிராமத்தின் குரங்குகளுக்கு தனது கைகளால் உணவளிப்பதையும் அவருடைய யூடியூப் பக்கத்தில் காணப்படுகிறது. அவரை பற்றிப் ஒரு கிராமவாசி கூறுகையில் மோனாலிசா ஒரு இயற்கை காதலி என்றும், தன் செல்லப்பிராணிகளை பராமரிப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார் என்றும் கூறினார். அவரது வீடு கிட்டத்தட்ட ஒரு மிருகக்காட்சி சாலை போல இருக்கிறது.

மற்ற செய்திகள்