‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கிபார்த்த செவிலியருக்கு நேர்ந்த கதி?’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹரியானாவில் பெண் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை கவனித்து வந்த செவிலியருக்கும் தற்போது கொரோனா பாதிப்பு உண்டாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்தபோது , கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண் நோயாளியின் செல்போனை, இந்த செவிலியர் பயன்படுத்தியதால்தான், இந்த செவியிலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது

இது குறித்து பேசிய அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முறையான உடை , கையுறை என கொரோனா தொற்று ஏற்படாதவாறு இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதனால், அந்த செவியிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட இயல்பாக வாய்ப்பில்லை என்றும், எனினும் அவர் நோயாளியின் செல்போனை பயன்படுத்தியிருப்பதால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் ஒருவர் தொட்ட செல்போனை இன்னொருவர் தொடுவதன் மூலமாக பரவும் என்பதால் கிருமிநாசினி கொண்டு செல்போனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்