"உள்ளாடை தெரியுற மாதிரி கொரோனா கவசம்".. "வேலை போனா என்ன?.. நாங்க இருக்கோம்!".. செவிலியருக்கு அடித்த ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரஷ்யாவின் மாஸ்கோ அருகில் உள்ள நகரத்தில் செயல்பட்டுவந்த மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Advertising
Advertising

இந்நிலையில், அங்கு கண்ணாடி போன்ற பாதுகாப்பு கவச உடைக்கு உள்ளே, உள்ளாடை மட்டும் அணிந்து செவிலியர் ஒருவர் பணிபுரிந்து வந்ததை அடுத்து, அவரது இந்த செயல் புகைப்படமாக வெளியாகி கடந்த ஓரிரு நாட்களாக இணையதளங்களின் மூலம் வைரலானது.

இந்த நிலையில் முழு பாதுகாப்பு கவச உடையால் உடல் கடுமையாக சூடாவதாகவும், அதனை தவிர்க்கவே உள்ளாடை மட்டுமே அணிந்து பணிபுரிந்ததாகவும் விளக்கம் தெரிவித்த செவிலியர், அதே சமயம் கவச உடை கண்ணாடிபோல் இருக்கும் என்பதை, தான் கவனிக்க மறந்து விட்டதாகவும் இதுபற்றி தனது தரப்பில் இருந்து முழு விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை அளிக்கும் போது அந்த அறையில் இருந்த மற்றொரு நோயாளி தனது செல்போனில் அந்த செவிலியரை புகைப்படம் எடுத்து அதனை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் மூலம் வைரலானதை அடுத்து உள்ளாடை மட்டுமே அணிந்தும், அதையும் வெளியே தெரியுமாறு கண்ணாடி போன்ற கவச பாதுகாப்பு உடையை அணிந்தும், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட இந்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து இந்த செவிலியருக்கு ஆதரவாகவும், அவரது வேலை பறிக்கப்பட்டதை கண்டித்தும் மொத்த இளைஞர்களும், சமூக வலைதளத்தைச் சேர்ந்தவர்களும் குரல் எழுப்பியும், பேரணி நடத்தியும் தங்கள் எதிர்ப்புகளை காண்பித்து வருகின்றனர். இதனிடையே,  பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் லிங்கரி அப்பெண்ணை தனது கம்பெனியின் மாடலாக பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளதை அடுத்து, இந்த செவிலியருக்கு அடித்தது ஜாக்பாட் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்