கொரோனா தடுப்பூசி செலுத்தியதும் ‘பிரதமர்’ என்னிடம் கேட்ட கேள்வி.. புதுச்சேரி செவிலியர் பகிர்ந்த அனுபவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி போட்ட அனுபவம் குறித்து செவிலியர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (01.03.2021) காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியை சேர்ந்த செவிலியர் நிவேதா மற்றும் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ரோசம்மா என்பவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்தினர்.

இதுகுறித்து பகிர்ந்த செவிலியர் நிவேதா, ‘புதுச்சேரி தான் எனது பூர்வீகம். நான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். தற்போது கொரோனா தடுப்பூசி பிரிவில் பணியாற்றுகிறேன். பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகிறார் என இன்று காலைதான் எனக்கு தெரியும்.

பிரதமர் என்னுடன் நன்றாக பேசினார். அவருக்கு பாரத் பயோடெக்கின் தடுப்பூசி போடப்பட்டது. 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும். எங்கிருந்து வருகிறீர்கள்? என பிரதமர் என்னிடம் கேட்டார். நான் புதுச்சேரியில் இருந்து வருவதாகக் கூறினேன். அதான் தடுப்பூசி போட்ட வலியே தெரியவில்லை என பிரதமர் கூறினார்’ என செவிலியர் நிவேதா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்