திடீரென கட்டான கரண்ட்... முழு கவச உடையுடன் 'லிப்ஃட்'டுக்குள் சிக்கிய நர்ஸ்... அடுத்து நடந்த விபரீதம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுழு கவச உடையுடன் நர்ஸ் ஒருவர் லிஃப்டுக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள கலசமேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் ஒருவர் லிப்ஃடில் ஒரு தளத்தில் இருந்து அடுத்த தளத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது திடீரென கரண்ட் கட்டானதால் அவர் லிஃப்டின் உள்ளேயே சிக்கிக்கொண்டார்.
உதவிக்காக அவர் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை. தொடர்ந்து காற்று,வெளிச்சம் இல்லாததால் அவர் உள்ளேயே மயக்கமடைந்து கிடந்துள்ளார். இதையடுத்து நீண்ட நேரத்துக்கு பின் அவர் லிஃப்டுக்குள் கிடந்ததை பார்த்த சிலர் அவரை காப்பாற்றி சிகிச்சை அளித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த நர்ஸ் கூறுகையில், '' நான் லிஃப்ட் உள்ளே செல்லும்போது மின்சாரம் தடைபட்டது. அவசர உதவி வேண்டி அங்கிருந்த அலாரத்தை அரைமணி நேரத்துக்கு மேல் அடித்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. காற்று இல்லாததால் வியர்க்க ஆரம்பித்தது. தொடர்ந்து மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை,'' என்று தெரிவித்து இருக்கிறார்.
மதியம் 3.05 மணிக்கு லிஃப்டுக்குள் மயங்கி விழுந்தவர், மாலை 4.20 மணிக்கே மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் முழுவதும் வலி இருப்பதாக அவர் தெரிவித்ததால் அவருக்கு அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு காய்ச்சல் இருந்ததால் அவருக்கு தற்போது கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “4 பேருக்கு கொரோனா உறுதி!”.. முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வந்த பரிசோதனை முடிவுகள்!
- ‘மூடப்பட்ட சென்னையின் எல்லைகள்’.. அமலுக்கு வந்த ‘முழு ஊரடங்கு’.. இந்த 12 நாள் என்னென்ன இயங்கும்? எவை இயங்காது..?
- "பேங்க்-க்கு போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கங்க!".. 'சென்னை' உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 'வங்கி' சேவைகளில் இன்று முதல் புதிய 'கட்டுப்பாடுகள்'!
- VIDEO: கார்ல கொரோனாவுக்கு பலியானவங்க ‘சடலம்’ இருக்கு சார்.. ‘சவப்பெட்டியை’ திறந்து பார்த்து மிரண்டுபோன போலீஸ்..!
- '5 நாட்களில் குணமாகும் கொரோனா நோயாளிகள்'... 'இந்த சிகிச்சையை விரிவுபடுத்தலாம்'... தமிழக அரசு அதிரடி முடிவு!
- 'மக்களுக்கு 'புரியவில்லையா...' அல்லது 'வேறு' வழியில்லாமல் 'விதி மீறுகிறார்களா?...' 'அலட்சியத்தால்' ஆபத்தை நோக்கி செல்லும் 'கோவை...'
- "இந்த வேலைய நம்பிதானே இந்த மாதிரி அபார்ட்மெண்ட்ல இருந்தோம்!".. சம்பள குறைப்பு, வேலை நீக்கத்தால், சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு நேரும் சோகம்!
- கொரோனாக்கான 'டோசிலிசுமாப்' எனும் ஸ்பெஷல் மருந்து...! 'அமெரிக்காவில் இருந்து தமிழகம் வருகிறது...' இந்த மருந்து உயிரிழப்பை நல்லாவே கண்ட்ரோல் பண்ணுதாம்...!
- 8 மாச கொழந்த 'பசியில' மண்ண சாப்பிட்டிருக்கு... 'மனநலம்' பாதித்த தாய்... ஊரைவிட்டு ஓடிய தந்தை... அதிர்ச்சி சம்பவம்!
- தென்காசியில் இன்று மட்டும் 33 பேருக்கு கொரோனா!.. தூத்துக்குடியில் தொடர்ந்து அதிகரிக்கிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?