'டூட்டி முடிச்சிட்டு வெளியே வந்த நர்ஸ்'... 'உயிருக்கு உயிராக நேசித்த கணவன் செய்த வெறிச்செயல்'... 'சிதைந்த மொத்த குடும்பம்'... அதிரவைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு நிமிட கோபம், அதனால் ஏற்படும் நிதானமின்மை ஒரு குடும்பத்தை எப்படி எல்லாம் சிதைத்து விடுகிறது என்பதற்கு பெரும் உதாரணமாக மாறியுள்ளது இந்த கொடூர சம்பவம்.

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின் மோனிப்பள்ளியை சேர்ந்தவர் மெரின் ஜாய். 26 வயதான இவர், அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். தற்போது கொரோனா பரவலால் மருத்துவமனை பணி என்பது அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இவர் வழக்கமாக பணிக்குச் சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென்று வந்த மர்ம நபர் ஒருவர் மெரின் ஜாய்யை கொடூரமாகக் குத்தி கொலை செய்தார். கொடூரமாக நடைபெற்ற இந்த கொலை சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிலிப்மேத்யூ என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது தான் அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. கைது செய்யப்பட்ட நபர், மெரின் ஜாயின் கணவர் என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் அதிகாரி பிராட் பிகொவொன் கூறுகையில், மெரின் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, அந்த நபர் அவரை இழுத்துப் பல முறை கத்தியால் குத்தி உள்ளார். இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போதும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என கூறினார். மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மெரின் ஜாய்க்கும், பிலிப்மேத்யூவிற்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தற்போது 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்தச்சூழ்நிலையில் கடந்த 2019-ஆம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். குழந்தையானது மெரினின் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளது. ஆனால் குழந்தையை மெரினும், அவரது தாயும் பார்க்க விடவில்லை என கூறப்படுகிறது. ஆனால் பிலிப் தனது மகள் மற்றும் மனைவி மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார்.

இதற்கிடையே கடந்த திங்கட்கிழமை, குழந்தையை இனி எப்போதும் உன்னைப் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள் என மெரின், பிலிப்பிடம் கூறியதாகத் தெரிகிறது. இதனால் கடும் கோபமடைந்த பிலிப், மறுநாள் வேலை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு நிமிட கோபத்தால் ஒட்டுமொத்த குடும்பமும் தற்போது சிதைந்து போனது தான் சோகத்தின் உச்சம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்