'கொரோனா வார்டுல வேல' ... 'அதுனால தான் என் குழந்தைக்கு' ... செவிலியரின் நெகிழ்ச்சி கதை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதுமுள்ள அனைத்து நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாட்டிலுமுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இரவு பகலாக தங்களது உயிரை பெரிதாக மதிக்காமல் அயராது உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம், கொச்சி மாவட்டத்தின் கலமசேரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வரும் ரீஜாஜா விஷ்ணு என்பவர் தனது பணியை மிகவும் அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'கொரோனா வார்டில் எனக்கு பணி கிடைத்ததும் முழுமனதுடன் அதனை ஏற்றுக் கொண்டு பணிபுரிந்து வருகிறேன். இந்த வார்டில் இருப்பவர்கள், குடும்ப உறுப்பினர்கள் கூட அருகில் இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம். புதிய நோயாளிகள் வார்டிற்கு வரும்போது எனக்கே மனதிற்குள் பயம் ஏற்படும்' என்றார்.
தனது குடும்பம் குறித்து நர்ஸ் ரீஜாஜா கூறுகையில், 'எனக்கு இரண்டு வயதில் குழந்தையுள்ளது. கொரோனா வார்டில் பணிபுரிந்து வருவதால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விட்டேன். இரவு நேரத்தில் குழந்தை உறங்க சிரமப்பட்டாலும், பாதுகாப்பை கருதி தாய்ப்பால் கொடுப்பதில்லை. கொரோனா வார்டில் இருந்து நோயாளிகள் குணமடைந்து செல்லும்போது உறவினர்களை விட நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம். புதிதாக நோயாளிகள் யாரும் வரக்கூடாது என்பதே எங்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது' என்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' பாதிக்கப்பட்ட ஒரு 'நோயாளிக்கு...' 'ஒரு நாளைக்கு' ஆகும் 'மலைக்க வைக்கும்' செலவு... 'கேரள சுகாதாரத்துறை அறிவிப்பு...'
- 'ஆறு மாத கர்ப்பம்' ... 'மூச்சு விடவும் சிரமம்' ... 'தயவு செஞ்சு வெளிய வராதீங்க' ... மீண்டு வந்த கர்ப்பிணியின் கொரோனா நாட்கள்!
- ‘8 மாத கர்ப்பம்’!.. ‘திடீர்ன்னு வந்த ஆர்டர்’.. 250கிமீ கார் டிராவல்.. ‘சல்யூட்’ போட வைத்த திருச்சி நர்ஸ்..!
- 'எனக்கும் 'கொரோனா' வர சான்ஸ் இருக்கு..!, ஆனால்...' 'சிகிச்சை அளிக்க வேண்டியது எங்களோட கடமை...' சீனாவில் இருந்து வந்தவருக்கு சிகிச்சை அளிக்கும் கேரள மாணவி...!
- கொரோனாவில் இருந்து 'தப்பித்த' 93 வயது முதியவர்... ஆஸ்பத்திரில கூட இந்த 'சாப்பாடு' தான் கேட்டாரு... 'ரகசியத்தை' உடைத்த பேரன்!
- 'டாக்டர்கிட்ட கேட்டு எடுத்துக்கலாம்' ... 'கேரள அரசின் புதிய உத்தரவுக்கு நோ சொன்ன உயர்நீதிமன்றம்'!
- மது அருந்துவதன் மூலம் கொரோனவை தடுக்கலாமா? ... விளக்கம் தரும் உலக சுகாதார அமைப்பு
- "தாலி கட்டுன புருஷனாவே இருந்தாலும் வீட்டுக்குள்ள வரக்கூடாது..." 'தடை விதித்த மனைவி...' 'கொரோனா குணமடைந்தாலும்...' 'விடாமல் துரத்தும் பயம்...' 'கணவனுக்கு' நேர்ந்த 'பரிதாப நிலை...'
- 'என்னோட மனைவி நிறைமாத கர்ப்பிணி' ... 'இருந்தாலும் உங்களுக்காக தான் இங்க' ... கடலூர் போலீசாரின் விழிப்புணர்வு வீடியோ!
- 'எத்தனையோ போலீஸ் பாத்துட்டோம்' ... 'ஆனா இவங்க வேற ரகம்' ... பெங்களூரு போலீசாரின் கலக்கல் விழிப்புணர்வு!