"என் பொண்ண கட்டி அணைச்சு கொஞ்சி எவ்ளோ நாளாச்சு"... உற்சாகமடைந்த "மகள்"... 'நெஞ்சை' கரைய வைக்கும் 'செவிலியர்' - மகள் 'வீடியோ'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் மூலம் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருவதால் பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனைகளிலேயே தங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்திலுள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வரும் சுகந்தா என்பவர் தனது வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையின் ஏற்பாட்டில் விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். தனது மகள் தன்னைக் காண வேண்டும் என சில நாட்களுக்கு முன் விடுதி அருகே வர, தனது சொந்த மகளை தொடக் கூட முடியாமல் சிறிது இடைவெளி நின்று கொண்டு இருவரும் கண்ணீர் வடித்தனர். தாயை அருகில் அழைத்து மகள் கண்ணீர் வடித்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.
இதனையடுத்து, இருபது நாட்களுக்கு பின்னர், தனிமைப்படுத்தட்ட பின்னர் சுகந்தா வீடு திரும்பியுள்ளார். முன்னதாக அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என்பதற்கான பரிசோதனை முடிந்து தொற்று இல்லை என்பது உறுதியானதையடுத்து அவர் வீட்டிற்கு கிளம்பிச் சென்றார். இருபது நாட்களாக தனது தாயை பிரிந்திருந்த குழந்தை தாய் வீட்டிற்கு வரும் தகவல் அறிந்ததும் தெருவில் தனது தாய்க்காக காத்திருந்தது.
தன்னை விடுதியில் காண வந்த மகளை தொடக் கூட முடியாமல் கண்ணீர் விட்டிருந்த நிலையில் தன்னருகில் வந்த மகளை அள்ளி அணைத்துக் கொண்டு கொஞ்சி மகிழ்ந்து சுகந்தா தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உள்நாட்டு, வெளிநாட்டு 'விமான' சேவைக்கான... டிக்கெட் 'முன்பதிவு' தேதிகளை 'அறிவித்த' ஏர் இந்தியா...
- 'இன்டர்நெட்டில் அதிகம் தேடிய வார்த்தை'... 'மீண்டும் சென்னை முதலிடமா'?... 'லிஸ்ட்டில் இருக்கும் நகரங்கள்'... ஷாக்கிங் ரிப்போர்ட்!
- ‘பசிக்கு தண்ணிய குடிச்சுட்டு இருக்கும்’.. குழந்தைங்க ‘பசிக்குதுனு’ அழுறாங்க.. ஊரடங்கால் கண்ணீர் வடிக்கும் குடும்பங்கள்..!
- கொரோனாவால் 'நிலைகுலைந்துள்ள' நாட்டில்... லாக் டவுனை 'தளர்த்த' கோரி 'போராடிய' மக்களால் 'பரபரப்பு'...
- "என் புருஷன கடைசியா ஒரு தடவ பாக்கணும்"... 2000 'கி.மீ' தொலைவில்... உயிரிழந்த "கணவர்"... கலெக்டர் செய்த உதவி!
- "இனிமே சரிப்பட்டு வராது"... "பஸ், ட்ரெயின நம்பி பிரயோஜனமில்ல"... நீட்டித்த 'ஊரடங்கு'... 'சைக்கிளில்' ஊருக்குக் கிளம்பிய தொழிலாளர்கள்!
- இனி 'வாட்ஸ்அப்' செயலியிலும் 'இந்த' வசதி!... அறிமுகமாகவுள்ள அசத்தலான 'புதிய' அப்டேட்...
- ‘சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள’... ‘முன்னாள் முதல்வரின் மகன் திருமணம்’...'துணை முதல்வர் எச்சரிக்கை’!
- தமிழ்நாடு: “சாப்பாடு இல்ல.. காலில் செருப்பு கூட இல்ல”.. 2 நாட்கள்... 170 கி.மீ நடந்தே வந்த 7 வயது சிறுவன்.. உருக்கும் சம்பவம்! வீடியோ!
- 'இந்தியாவில்' கொரோனா பாதிப்பு... 'மே' மாதம் 'உச்சத்தை' தொட வாய்ப்பு 'ஆனால்'... வெளியாகியுள்ள 'கணிப்பு'...