டிசம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. இதோ செக் பண்ணுங்க.. முழு லிஸ்ட்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு டிசம்பர் மாதம் 2021 ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்தியாவில் உள்ள அத்தனை பொது மற்றும் தனியார் வங்கிகளுக்குப் பொருந்தும்.

Advertising
>
Advertising

அரசு விடுமுறைகள், சனி, ஞாயிற்றுக் கிழமைகள் என அனைத்தும் சேர்த்து வங்கிகளுக்கு வருகிற டிசம்பர் மாதம் மட்டும் 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறைகள் இல்லாமல் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட டிசம்பர் மாதத்துக்கான விடுமுறைகள் 7 நாட்களாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி விதிமுறைகளின் அடிப்படையில் மாநில வாரியான விடுமுறைகள், மதம் சார்ந்த விழா விடுமுறைகள் மற்றும் திருவிழாக்கள் என மூன்று வகைகளில் விடுமுறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. மாநில வாரியாகவும் சில விடுமுறை நாட்கள் மாறுதல்களுக்கு உட்படும். இதுகுறித்து அறிய வங்கி சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிகளுக்கு சென்று விடுமுறை நாட்கள் குறித்து விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

விடுமுறை நாட்களைத் தெரிந்து கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி பணிகளை நிர்ணயித்துக் கொள்ளலாம்.தற்போது வங்கி வேளைகள் பல டிஜிட்டல் மயமாகிவிட்டது என்றாலும் அதிகத் தொகையை கணக்கில் இருந்து எடுத்தல், கடன் சேவை போன்ற சேவைகளுக்கு இன்னமும் பலர் நேரடியாக வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய தேவை உள்ளது.

தமிழ்நாட்டில் வார விடுமுறைகள் போக கிறிஸ்துமஸ் தினம் அன்று மட்டும் தான் கூடுதலாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HOLIDAY, BANK HOLIDAYS, SBI, RBI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்