தடுப்பூசி போட்டாச்சா..? அப்போ WhatsApp-லயே சர்டிபிகேட் டவுன்லோட் பண்ணிக்கலாம்.. ரொம்ப ‘ஈஸியான’ வழி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ் அப்பிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் மத்திய அரசு வழி வகை செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 லட்சத்து 28 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது டெல்டா வகை வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு நாடுகள் தடுப்பூசி செலுத்துக்கொண்ட பயணிகளையே அனுமதித்து வருகிறது. அதேபோல் பல நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய, அதற்கான சான்றிதழை கேட்டு வருகிறது. அதனால் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தற்போது அவசியமாகியுள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வாட்ஸ் அப் மூலம் எளிமையாக சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ள மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சகம் வழி வகை செய்துள்ளது.

அதன்படி மத்திய அரசு MyGov Corona Helpdesk என்ற வாட்ஸ் அப் சாட்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் +91 9013151515 என்ற எண்ணை உங்களது செல்போனில் சேவ் (Save) செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த எண்ணின் சாட்டை (Chat)-ஐ திறக்கவும். அதில் MyGov சாட் பக்கத்தை பெறுவீர்கள்.

இதனை அடுத்து அதில், ‘Download Certificate’ என டைப் செய்து அனுப்ப வேண்டும். நீங்கள் அனுப்பியதும், உங்கள் செல்போனுக்கு OTP அனுப்பப்படும். OTP வந்ததும் அதனை சாட் பக்கத்தில் அனுப்ப வேண்டும். ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பெயரை ஒரே செல்போன் எண்ணில் பதிவு செய்திருந்தால், வாட்ஸ் அப் உங்களுக்கு நபர்களின் பட்டியலை அனுப்பி தேர்வு செய்யும்படி கேட்கும்.

இதனை அடுத்து நீங்கள் பதிவு செய்த நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒன்று, இரண்டு அல்லது மூன்று போன்ற விருப்பங்கள் உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் சான்றிதழ் பெற விரும்பும் சான்றிதழ் எண்ணை அதில் டைப் செய்து அனுப்ப வேண்டும். பின்னர் அந்த சாட்பாக்ஸில் உங்களுக்கு COVID-19 தடுப்பூசி சான்றிதழ் அனுப்பப்படும் அதை உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நீங்கள் ஒரு டோஸ் மட்டும் செலுத்தி இருந்தாலும் அதற்கான சான்றிதழையும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்