‘அங்கன்வாடி மையத்தில் கழிவறையில் தயாரிக்கப்படும் உணவு’... 'அமைச்சரின் பேச்சால் எழுந்த சர்ச்சை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅங்கன்வாடி மையத்தின் கழிவறையில் உணவு சமைக்கப்பட்ட நிலையில், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என அம்மாநில அமைச்சர் விளக்கம் அளித்திருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் சிவபுரி மாவட்டம் கரேரா என்ற இடத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, கழிவறையில் சமைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதில் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், பொருட்கள் கழிவறையின் மேல் வைக்கப்படுவதாகவும், சிலிண்டர் மற்றும் ஸ்டவ் ஆகியவையும் அங்கேயே இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாநில தகவல் தொடர்புத் துறை அமைச்சர் இமார்தி தேவி, ‘கழிவறையில் உணவு சமைப்பதால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார். வீட்டில் குளியல் அறையுடன் கழிவறை இணைந்து இருந்தால், உறவினர்கள் உங்கள் வீட்டில் உணவு அருந்த மறுப்பார்களா? குளியல் அறையில் பாத்திரங்கள் வைக்கலாம். நாம் கூட நமது வீடுகளில் பாத்திரங்களை வைத்திருக்கிறோம்.
அந்த அங்கன்வாடி மையத்தில் கழிவறைக்கும், ஸ்டவுக்கும் இடையே இடைவெளி உள்ளது. எனவே, கழிவறைக்குள் சமைப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என கூறினார். இதனால், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய மர்ம நபர்..! அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்..!
- 'மனைவியின்'.. போலீஸ் யுனிஃபார்மை வைத்து கணவர், தன் காதலியுடன் போட்ட 'வேற லெவல்' ப்ளான்!
- 'இப்படி ஒரு வயசான காலத்துலயா.. ?'.. ’எந்த பெற்றோருக்கும் இந்த நிலை வரக்கூடாது'.. உருக்கும் வீடியோ!
- ‘இப்படி எல்லாம் கூடவா பண்ணுவாங்க..?’ அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..
- ‘கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் சிக்கிய நபர்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்!
- 'முதலைகளிடம் சிக்கிய 2 வயது குழந்தை'... 'பதறவைத்த சம்பவம்'!
- ‘கோவையில் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட 2 வயது குழந்தை’.. தாய் மாமா அளித்த பகீர் வாக்குமூலம்!
- இரவில் தாயுடன் தூங்கிய குழந்தை காலையில் கிணற்றில் இறந்துகிடந்த மர்மம்..! கோவையை அதிர வைத்த சம்பவம்!
- கர்ப்பிணிப் பெண்ணை சுட்டுக் கொன்ற சொந்த சகோதர்கள்..! போலிஸாரிடம் அளித்த பகீர் வாக்குமூலம்!
- ‘திருமணத்துக்கு வந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்’.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ காட்சி!