‘கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதா டிக்டாக்?’.. தடை உத்தரவுக்கு பின் டிக்டாக்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய அரசு நேற்றைய தினம் TikTok, Helo, Share it, UC Browser மற்றும் WeChat  உள்பட 59 சீன செயலிகளை, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் தடை செய்வதாக அதிரடியாக அறிவித்தது.

இவ்வரிசையில் டிக்டாக் ஆப்பினையும் தனிநபர் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை உள்ளிட்டவற்றின் விதிமுறைச் சட்டங்கள் 2009-ன் அடிப்படையில் இந்தியா தடை செய்தது. இதனிடையே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பரபரப்பான இந்த செய்தியை அடுத்து, அரசு அதிகாரிகளைச் சந்தித்து டிக்டாக்கின் செயல்பாடுகள் தொடர்பாக பதிலளிப்பதற்கும் விளக்கங்களை சமர்ப்பிப்பதற்கும் டிக்டாக்கின் தரப்பு அழைப்பு விடுத்துள்ளதாகவும் பேச முனைந்து வருவதாகவும், இந்திய டிக்டாக் தலைமை அதிகாரி நிகில் காந்தியின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுபற்றிய டிக்டாக் நிறுவனத்தின் அந்த அறிக்கையில் "எங்களது டிக்டாக்கை 14 இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்துள்ளோம்.  இதன் மூலம் முதல் முறை இணையதளம் பயன்படுத்தும் சாதாரண மக்கள் வரையில் இணையத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளோம். டிக்டாக்கினால் கோடிக்கணக்கான பயனர்கள், கலைஞர்கள், கதை சொல்லிகள், கல்வியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக டிக்டாக்கை சார்ந்துள்ளனர். டிக்டாக் இந்திய சட்டத்தின் கீழ் அனைத்து தனிநபர் தரவு மற்றும் தனியுரிமை பாதுகாப்பு தேவைகளுக்காகு ஒத்துழைக்கவே செய்கிறது. மேலும் இந்தியாவில் உள்ள டிக்டாக் பயனர்களின் எந்த தகவலையும்

சீன அரசு உட்பட எந்த வெளிநாட்டு அரசாங்கத்துடனும் டிக்டாக் பகிர்ந்து கொள்ளவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்