'அந்த' நிலை இங்கு வராது... தொடர்ந்து 'உயரும்' பாதிப்புக்கு இடையே... 'ஆறுதல்' தரும் தகவல்களுடன் சுகாதாரத்துறை மந்திரி 'நம்பிக்கை'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வளர்ந்த நாடுகளை போன்ற மோசமான கொரோனா பாதிப்பு நிலை இந்தியாவில் இருக்காது என மத்திய சுகாதாரத்துறை மந்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்துப் பேசியுள்ள மந்திரி ஹர்ஷவர்தன், "கொரோனாவால் வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ளது போன்ற மோசமான பாதிப்பு இந்தியாவில் வரும் என நான் நினைக்கவில்லை. இருப்பினும் மோசமான சூழல் ஏற்பட்டாலும் சமாளிப்பதற்கான தயார் நிலையிலேயே நாம் உள்ளோம். நாடு முழுவதும் 8,043 மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்தவர்கள், அயல்நாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் ஆகியோருக்காக நாடு முழுவதும் 7,640 தனிமை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இதுவரை நாடு முழுவதும் 69 லட்சம் என்95 முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், 32.76 லட்சம் பிபிஇ கருவிகளும் அனுப்பப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 3.3 சதவிகிதமாக உள்ள நிலையில், குணமடைபவர்கள் விகிதம் 29.9 சதவிகிதமாக உள்ளது. இவை நல்ல அறிகுறிகளே. அத்துடன் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாவது கடந்த 3 நாட்களாகக் குறைந்துள்ளது. 0.38 சதவீத நோயாளிகள் மட்டுமே வெண்டிலேட்டரில் உள்ளனர். 1.88 சதவிகித நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்