‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. இங்க யாருக்கும் ‘கொரோனா’ பாதிப்பு இல்லை.. ‘முதலாவதாக’ அறிவித்த மாநிலம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் குணமடைந்துவிட்டதாக கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 17,265 பேருக்கு கொரோ உறுதி செய்யப்பட்டுள்ளது. 2547 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 543 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கோவாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வந்த கடைசி நபரும் குணமடைந்து விட்டதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கோவாவில் 7 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 6 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 3ம் தேதிக்குப்பின் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்