"பேச்சும் கட்.. உறவும் கட்!".. 'பரபரப்பை' கிளப்பியிருக்கும் 'வடகொரியாவின்' திடீர் 'முடிவு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவுடன் சீனா தகராறு செய்து வருவதுபோல, தென் கொரியாவுடன் வட கொரியா தகராறு செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஹனோய் நகரில் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இடையேயான உச்சிமாநாடு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து வடகொரியா பெரும்பாலும் தென்கொரியாவுடனான தொடர்பை துண்டித்தது.

Advertising
Advertising

லடாக் பகுதியில் சீனா தன் ஆக்கிரமைப்பை நிலைநாட்ட முயன்றது போலவே, தென் கொரியாவுடன் அனைத்து விதமான உறவையும் துண்டிக்க வடகொரியா முடிவெடுத்துள்ளதாக அந்த நாட்டு  அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அவரின் சகோதரி கிம் யோ ஜாங் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழு துணைத் தலைவர் கிம் யோங் சோல் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் தென்கொரியா பற்றிய முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்கொரிய நாட்டுக்கு எதிரி நாட்டு அந்தஸ்தினையே வடகொரியா கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் இருநாட்டு ராணுவம், இருநாட்டு பிரதமர் அலுவலகத்துக்கிடையே இருந்த ஹாட்லைன் இணைப்புகள் உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளன. தென் கொரிய அதிகாரிகளின் துரோகம் மற்றும் தந்திரமான நடத்தையால் கோபமடைந்த வடகொரிய மக்களின் மாண்பை காப்பாற்றும் வகையில் தென் கொரியா நடந்துகொள்ளவில்லை என்றும், இனி அவர்களுடன் பேச்சுவார்த்தையே இல்லை என்றும் அந்த கூட்டத்தில் பேசிக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்