கேரளாவில் 'திடீரென' பரவும் 'அடுத்த' வைரஸ்..! இது வந்தா 'என்ன' அறிகுறி..? கேரள சுகாதரத்துறை வெளியிட்டுள்ள 'முக்கிய' தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் தாக்கமே ஒரு சில மாநிலங்களில் அடங்காத நிலையில் தற்போது மீண்டும் அதிக வேகமாக பரவும் மற்றொரு வைரஸ் பாதிப்பு கேரளாவில் பதிவாகியுள்ளது.

Advertising
>
Advertising

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் இன்றளவும் பல இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் தாக்கத்திலிருந்தே இன்னும் வெளிவராத கேரளாவில், மேலும் அதிவேகமாக பரவக் கூடிய நோரோவைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில், வித்திரி பகுதிக்கு அருகே இருக்கும் புக்கோடில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 13 மாணவர்களுக்கு நோரோவைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதோடு, இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் இதன் பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதோடு, இதுவரை நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், வேறுபகுதிகளில் நோரோவைரஸ் தொற்று எதுவும் பதிவாகவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோரோவைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதாகவும் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. பொதுவாக நோரோவைரஸ் குளிர்கால மாதங்களில் அதிகமாக பரவும் என கூறப்படுகிறது.

அதோடு, இந்த நோரோவைரஸ் பாதிப்பு இங்கிலாந்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோடை மாதங்களில் எதிர்பார்த்ததை விட நர்சரி மற்றும் குழந்தை பராமரிப்பு வசதிகளில் வேகமாக பரவி உள்ளது என்று இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நோரோவைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகளாக திடீர் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, உடலில் அதிக வெப்பநிலை, வயிற்று வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

நோய் அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும் எனவும், நோரோவைரஸ் COVID-19 போல, ஆல்கஹால் ஜெல்கள் அழியாது என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் சோப்பும் தண்ணீரும் சேர்த்து அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

NOROVIRUS, WAYANAD, KERALA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்