‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’!.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு மாம்பழத்தின் விலை 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு விற்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் ‘நூர்ஜகான்’ ரக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. இந்த ரக மாம்பழம் ஆப்கானிஸ்தான் நாட்டை தாயகமாக கொண்டது. அந்நாட்டை சேர்ந்த இந்த நூர்ஜகான் மாம்பழம், இந்தியாவில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது.

இந்த அலிராஜ்பூர் மாவட்டம் குஜராத் மாநில எல்லையில் அமைந்துள்ளது. அதனால் குஜராத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இந்த ரக மாம்பழங்களை வாங்கி செல்கின்றனர். இந்த மாம்பழத்தின் சிறப்பம்சம் இதன் எடைதான். ஒரு பழம் சுமார் 2 கிலோ முதல் 3.5 கிலோ வரை இருக்கிறது. அதனால் ஒரு மாம்பழம் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நூர்ஜகான் ரக மாம்பழ விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாம்பழ விற்பனையும் சிறப்பாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த மாம்பழங்களை வாங்க வேண்டுமானால், முன்பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்