"ஹலோ பாஸ், நாங்க தான் கொஞ்சம் முன்னாடி உங்க 'பர்ஸ்'ஸ ஆட்டைய போட்டது"... இந்த 'ATM பாஸ்வேர்டு’ மட்டும் கொஞ்சம் சொல்றீங்களா??"... பாஸ்வேர்டு கேட்டு, போலீசாரிடம் சிக்கிய 'முட்டாள்' திருடர்கள்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நொய்டா பகுதியில் பைக்கில் வந்த திருடர்கள் இரண்டு பேர், ஒருவரின் மொபைல் போன் மற்றும் அவரது பர்ஸை திருடி தப்பித்து சென்ற நிலையில் தங்களின் தவறுதலால் போலீசாரிடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.

நொய்டா அருகே அமைந்துள்ள கிராமம் ஒன்றின் சாலையில் நேற்றிரவு இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அவ்வழியே நடந்து சென்ற நபரிடம் பைக்கில் வந்த இரண்டு திருடர்கள் துப்பாக்கியை காட்டு மிரட்டி அவரின் மொபைல் போன் மற்றும் பர்ஸினை திருடிச் சென்றுள்ளனர்.

அந்த பர்ஸில், கொஞ்சம் பணமும், ஆதார் கார்டு, மற்றும் ATM கார்டு ஆகியவை இருந்துள்ளன. திருடி விட்டு சில தூரம் சென்ற திருடர்கள் பைக்கில் மீண்டும் வந்து திருடிய நபரிடம் ATM கார்டின் பின் நம்பரை கேட்டுள்ளனர். அதனை அறிந்து கொண்டு மீண்டும் தப்பித்து சென்றுள்ளனர்.

உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், திருடர்கள் சென்ற பைக்கை செக் போஸ்ட் ஒன்றில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த திருடர்கள், கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். தொடர்ந்து அவர்களை பின் தொடர்ந்த போலீஸ், சில நிமிடங்களிலேயே அவர்களை துரத்திப் பிடித்தனர்.

இந்த தாக்குதலில் இரண்டு போலீசாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்டு சிக்கிய இரண்டு திருடர்களுக்கு சுமார் 25 வயது இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்த பர்ஸ் மற்றும் அதிலிருந்த சுமார் 3000 ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்