சார் என் பொண்டாட்டிக்கு ‘பிரசவம்’.. ‘ரொம்ப சீரியஸ்’.. போனில் கேட்ட ‘அழுகுரல்’.. சட்டென களத்தில் இறங்கிய போலீசார்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் போலீசாரின் அவசர எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அழுதபடி பேசிய விஜயக்குமார் என்ற நபர், தனது மனைவிக்கு பிரசவம் நடைபெறுவதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்ட காவலர்கள் அனுஜ்குமார் தியாகி மற்றும் லாலா ராம் ஆகிய இருவரும் கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உடனே சென்றுள்ளனர்.

அப்பெண்ணிற்கு தேவைப்படும் ரத்தப்பிரிவில் தாங்களே இருந்ததால் இருவரும் உடனே ரத்ததானம் செய்துள்ளனர். இதனை அடுத்து அப்பெண்ணுக்கு நல்ல முறையில் பிரசவம் நடந்து, ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தக்க சமயத்தில் உதவிய காவலர்களுக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் நேபால் எல்லையை ஒட்டியுள்ள பைரைச் பகுதியை சேர்ந்த காவலர் ஒருவரின் தந்தைக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போயுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்க அவசரமாக மருத்துகள் தேவைப்பட்டுள்ளன. ஆனால் அந்த மருந்துகள் அனைத்தும் டெல்லியில் மட்டுமே கிடைக்கும் என்பதால் இதுகுறித்து ட்விட்டரில் உதவி கேட்டுள்ளார்.

இதைப் பார்த்த உத்தரப்பிரதேச போலீசார் உடனே டெல்லி காவல்துறையை தொடர்பு கொண்டு அவர் குறிப்பிட்ட மருந்துகளை வாங்கி அனுப்புமாறு உதவி கேட்டுள்ளனர். இதனை அடுத்து டெல்லி போலீசார் அந்த மருந்துகளை வாங்கி நொய்டா எல்லையில் உள்ள போலீசாரிடம் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சம்பந்தப்பட்ட காவலருக்கு மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. சுமார் 960 கிலோமீட்டர் பயணம் செய்த மருத்து, இன்று அதிகாலை காவலரின் வீட்டுக்கு சென்று அவரின் தந்தை உயிரை காப்பாற்றியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்