'இன்னும் தடுப்பூசி போடலியா'... 'அப்போ சம்பளத்தை எதிர்பாக்காதிங்க'... அதிர்ந்துபோன ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு கண்டிப்புடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

தற்போது தடுப்பூசி மட்டுமே கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் முக்கிய ஆயுதமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் கரேலா பெந்த்ரா மார்வாகி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனப் பழங்குடியினர் நலத்துறை உதவி ஆணையர் கே.எஸ்.மஸ்ராம் உத்தரவிட்டார்.

அதில், கரேலா பெந்த்ரா மார்வாகியில் உள்ள பழங்குடியினர் நலத்துறை அலுவலகங்கள், துறைக்குட்பட்ட ஆசிரமங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவரும் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு, அதற்கான சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் அடுத்த மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நகல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. ஆணையரின் உத்தரவுக்குச் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்