சட்டென்று மாறிய வானிலை அறிக்கை.. ‘வந்த வேகத்தில் யூ டர்ன் அடிக்கிறதா ஃபானி புயல்?’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஃபானி புயல் சென்னையை நெருங்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபானி புயல் மேலும் வலுப்பெற்று மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 1200 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும், இன்று அது தீவிர புயலாகவும், அதன் பின்னர் அதிதீவிர புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 30 ம் தேதி இந்த புயல் வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாகவும் அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வட கிழக்கு திசையில் திரும்பும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதைய நிலவரத்தின்படி வட தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து சுமார் 200 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே புயல் வரக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், புயல் தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு குறைவு என்றும் கூறியுள்ளது.
இந்த புயலால் வட தமிழகப் பகுதிகளில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை.. எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!
- ‘நானும் அவர மாதிரி விக்கெட் கீப்பர், கேப்டன் ஆகணும்’.. ‘தல’ பேரில் தெருவின் பெயர்.. மாஸ் காட்டி வைரலான சென்னையின் முக்கிய நகரம்!
- அம்மாவைக் கொல்லத் திட்டம்.. லண்டனிலிருந்து வந்த மகன்.. திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!
- அடடா..! ஒரு எழுத்துல உலக சாதனையை பறி கொடுத்த சென்னை சென்ட்ரல்!
- 'காதலின் பேரால்’ என்ஜினியரிங் மாணவர்கள் செய்த காரியம்.. கல்லூரி மாணவியின் துணிச்சல்!
- 'கிணற்றுக்குள் விழுந்த குழந்தை'...சூப்பர் ஹீரோவான 'சென்னை பாட்டி'...மெய்சிலிர்க்கும் சம்பவம்!
- ‘நாம பிரிஞ்சடலாம்’.. தற்கொலைக்கு முன் காதலன் அனுப்பிய வீடியோ.. காதலியின் விபரீத முடிவு!
- இனி அவங்களும் நாமும் ஒன்றுதான்... கலக்கும் தேர்தல் ஆணையம்!
- 'புது டிரஸ்க்கு பணமில்லயா?'.. கணவர் மீதான ஆத்திரத்தில் பிறந்த நாளன்று மகனின் கழுத்தை அறுத்த பெண்!
- ‘நா ஹரிணி.. கல்யாணத்த எங்க ஊர்லயே வெச்சிக்கலாம்..’ மேட்ரிமோனியில் பெண் குரலில் பேசி சீட்டிங்!