அது ஒண்ணும் 'பாப்கார்ன்' இல்லங்க...! 'ஓமிக்ரான் வைரஸ்...' - பிசிசிஐ-ஐ எச்சரித்த அமைச்சர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸின் உருமாறியாக கருதப்படும் ஒமைக்ரான் வைரஸ்  தென் ஆப்பிரிக்காவில் அதிகளவில் பரவிவரும் நிலையில் இந்திய அணியின் தென்ஆப்பிரிக்கா பயணம் ரத்து ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertising
>
Advertising

தென்ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் வைரஸ்  என்ற அதிகப்பாதிப்புகளை ஏற்படுத்தும் புதியவகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கிய இந்த வைரஸ் ஒரு வாரத்துக்குள் போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்நிலையில், இந்திய அணி டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடருக்காகச் செல்லவுள்ளது. ஏற்கனவே நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்கப் பயணத்தை ரத்து செய்துள்ள நிலையில் இந்தியா வாண்டடாக வண்டியில் ஏறும் வகையில் செல்கிறது.

ஆனால், பிசிசிஐ இந்திய அணியை தென் ஆப்பிரிக்காவிற்கு அனுப்புவதற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்திய அணி பயணம் செய்யும் முன் மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தி அனுமதி பெற்றபின்புதான் செல்ல வேண்டும் என்று பிசிசிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜமகேந்திரவர்மன் தொகுதி எம்.பி. மர்கானி பரத் ராம் ட்விட்டரில், 'தென் ஆப்ரிக்காவில் பரவிவருவது பாப்கார்ன் இல்லை, ஒமைக்ரான் வைரஸ் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் பிசிசிஐ இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணத்தை தொடர விரும்புகிறது என தெரியவில்லைல்லை. வீரர்களுக்கு மோசமான உடல்நலப் பாதிப்புகள் வரக்கூடும். ஏற்கெனவே நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்கப் பயணத்தை ரத்து செய்துள்ளது. இந்திய அணியை தென் ஆப்பிரி்க்காவுக்கு அனுப்பாதீர்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில் “ நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி முடிந்தபின், வரும் 8-ம் தேதி இந்திய அணியின் சீனியர் வீரர்கள் தென் ஆப்பிரிக்கா செல்வார்கள் எனத் தெரிகிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் குறித்து எந்த கருத்தும் இல்லை. அதற்காக பிசிசிஐ காத்திருக்கிறது” எனத் தெரிவித்தனர்

ஒமைக்ரான் வைரஸ் குறித்து பெரிதாக ஏதும் தெரியாதபோது, மக்களை மத்திய அரசு எச்சரித்து வரும்போது, பிரபலங்களாக இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தென் ஆப்பிரி்க்க பயணம் செல்ல அனுமதிப்பதுநல்ல உதாரணமாக இருக்காது. இந்த வாரம் மக்களவையில் கரோனா வைரஸ் தொற்று குறித்த விவாதம் நடக்கும் போது, இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் குறித்து கேள்வியை எழுப்புவேன் ” எனக் கூறியுள்ளார்.

POPCORN, SOUTH AFRICA, OMICRON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்