"அடுத்த ஒரு வருஷத்துக்கு".. 'அதிரடியாக அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!'
முகப்பு > செய்திகள் > இந்தியாஅடுத்த ஓர் ஆண்டுக்கு எந்த விதமான அரசின் புதிய திட்டங்களும் கிடையாது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கோடு, 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் இந்தியப் பொருளாதாரம் பெரும் நலிவை சந்தித்ததால், அந்த பாதிப்பிலிருந்து மீளும் விதமாக பல்வேறு சலுகைகளை கொரோனா நிவாரண நிதியாக 20.97 லட்ச ரூபாய்க்கான திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள 8.01 லட்ச ரூபாய் நிதியையும் அடக்கியே இந்த நிதித் தொகுப்பை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்த ஓராண்டுக்கு எந்த வித புதிய அரசாங்கத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படாது என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட மத்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கையில், “கொரோனா தொற்று காரணமாக அரசிடம் இருக்கும் பொது நிதியைப் பயன்படுத்துவதில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளதோடு இதுபோன்று தொடர்ந்து ஏற்பட உள்ள மாற்றங்களுக்கு ஏற்றாற்போல், நிதிப் பங்கீடுகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வேலூரில் திடீரென்று வேகமெடுக்கும் கொரோனா!.. பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'மாவட்டம் விட்டு மாவட்டம் போறீங்களா'?... 'இ பாஸுக்கு இந்த டோக்கனை கூட காட்டலாம்'... தமிழக அரசு அறிவிப்பு!
- தமிழகத்தில் அடங்காத கொரோனா!.. ஒரே நாளில் 1,562 பேருக்கு தொற்று!.. குணமடைவோர் எண்ணிக்கை இவ்வளவா?.. முழு விவரம் உள்ளே
- 'எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சோதனை'... 'ஒரு பக்கம் கொரோனா, இன்னொரு பக்கம் இதுவா'?... துயரத்திற்கு மேல் துயரம்!
- இந்த நிலைமை எந்த 'பொண்ணுக்கும்' வரக்கூடாது... 'வீல் சேரில்' வைத்தே... 'கர்ப்பிணி' பெண்ணிற்கு நடந்த 'பிரசவம்'... இறுதியில் நடந்தேறிய 'கொடுமை'!
- 'துணி மாஸ்க் யூஸ் பண்றது வேஸ்ட்...' 'இந்தெந்த மாஸ்க் எல்லாம் உபயோகிக்கலாம்...' உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு...
- ‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. நாங்க இப்போ ‘கொரோனா’ இல்லாத நாடு’.. அறிவித்த பிரதமர்..!
- 'இந்தியாவில் செப்டம்பரில் இந்த மேஜிக் நடக்குமா?'... 'கணித முறை மாதிரி மூலம் ஆய்வு'... தித்திப்பான செய்தியை சொன்ன நிபுணர்கள்!
- 'இங்கிலாந்து' பப்களில் 'வேலைபார்க்கும்' 3.5 மில்லியன் 'ஊழியர்கள்!'.. 'நீண்ட' நாட்களுக்கு பிறகு வெளியான 'மகிழ்ச்சி' தகவல்!
- 'இ-பாஸ்' வாங்காம 'ஊர் பக்கம்' போய்டாதிங்க... 'சென்னையிலிருந்து திருப்பூருக்கு போன...' '4 பேருக்கு' நேர்ந்த கதி...