'கடைசி 24 மணி நேரத்துல யாரும் பாதிக்கப்படல' ... இனி தான் கேர்புல்லா இருக்கணும் ... டெல்லி முதல்வரின் லேட்டஸ்ட் அப்டேட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாரும் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்படவில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வருகிறது. மக்கள் பொதுவெளிகளில் நடமாடாமல் வீட்டிற்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கூடுவதை தவிர்க்கும் அளவிற்கு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று மூலம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நானூறுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'இது குறித்து நாம் இப்போது மகிழ்ச்சியடையக்கூடாது. மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. அதனால் அரசுக்கு மக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என கூறியுள்ளார்.
டெல்லியில் ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் வரும் 31 ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என டெல்லி அரசு அறிவித்திருந்தது. டெல்லியில் கொரோனா வைரசிற்கு தற்போது 30 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல்' ... நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ள பிரதமர் ... மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாய்ப்பு?
- வரியா, 'சோப் போட்டு கை கழுவ ரெடியா' ... ஆடல் பாடலுடன் கொரோனா விழிப்புணர்வு ... அசத்திய தீயணைப்பு படையினர்!
- 'வீட்டுக்குள்ளயே இருங்க, வெளிய வர வேணாம்' ... மதுக்கடைகளுக்கு க்ளோஸ் ... புதுச்சேரிக்கு 144!
- 'புதுக்கோட்டை' மாணவ மணிகளே ... வீட்ல போர் அடிக்குதா, இந்த சான்ஸ் உங்களுக்கு தான் ... புதுகோட்டை கலெக்டரின் சூப்பர் முயற்சி!
- ‘தற்காலிகமாக சேவையை துண்டித்த’ .. ‘பிரபல கேப் நிறுவனம்!’.. கொரோனா லாக்டவுன் எதிரொலி!
- 'ரயிலில்' போலீசாரை பார்த்ததும் 'பதுங்கிய' இருவர்... 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்கள் என 'தெரிந்ததும்'... 'பதறிப்' போன 'பயணிகள்'...
- அடுத்த 'பத்து நாட்கள்' தமிழக எல்லைகளுக்கு சீல் ... அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி ... கொரோனா தொற்றைத் தடுக்க தமிழக அரசின் லேட்டஸ்ட் அறிக்கை
- 'தூக்கிலிட்டவருக்கும்' 'மனநல' ஆலோசனை... 4 'குற்றவாளிகளை' தூக்கிலிட.... 'பவன் ஜல்லாட்' வாங்கிய 'சம்பளம்' எவ்வளவு தெரியுமா?...
- நிர்பயா குற்றவாளிகளின் கடைசி 'திக் திக்' நிமிடங்கள்... திகார் சிறையில் அதிகாலையில் நடைபெற்றது என்ன?...
- "நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன்..." 'குற்றவாளிகளின்' வழக்கறிஞர் 'சவால்'... 'கடைசிநேர' வாதமும், போராட்டமும் 'தோல்வி'... நள்ளிரவு '2.30 மணிக்கு' 'மனு தள்ளுபடி'...