கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு... தடுப்பூசி தேவையில்லையா!?.. மருத்துவ வல்லுநர் குழு முக்கிய தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழு முக்கிய கருத்தை பரிந்துரைத்துள்ளது.
பிரதமரிடம் மருத்துவ வல்லுநர் குழு அளித்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி சரியான பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்த பின்னர், தடுப்பூசி போடுவதை தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்டுள்ள மருத்துவ வல்லுநர் குழு, அதைவிட தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளாவோரைக் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அதிக தொற்றுப் பரவல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துவது அவசியம் என்றும், டெல்டா வகை தொற்றுப் பரவல் அதிகம் உள்ள இடங்களில் மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான கால இடைவெளியை குறைக்கலாம் என்றும் வல்லுநர் குழு குறிப்பிட்டுள்ளது.
தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்துவதற்கான கால இடைவெளியானது 12 வாரங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆற்றுக்கு அந்த பக்கமும் நிறைய மக்கள் கஷ்ட படுவாங்க இல்ல...' 'ஆற்றைக் கடக்க கொரோனா மருத்துவ பணியாளர்கள் எடுத்த ரிஸ்க்...' - இணையத்தில் 'வைரலாகும்' புகைப்படம்...!
- 'எல்லாம் நல்லா தானே போகுதுன்னு நெனச்சோம்'... 'இடியாய் வந்த செய்தி'... 3 மாதத்திற்கு பிறகு தவித்து நிற்கும் நாடு!
- மேடம்...! 'கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வெளிய வாங்க...' 'கொரோனா சரி ஆன உடனே...' 'சிகிச்சை அளித்த செவிலியர்களை அழைத்து...' - வழக்கறிஞர் செய்த 'நெகிழ' வைக்கும் காரியம்...!
- "என் வாழ்க்கைல முதல் முறையா... வருமான வரி செலுத்த முடியல"!.. 'ஏன் தெரியுமா'?.. நடிகை கங்கனா ரனாவத் வைரல் கருத்து!!
- "யூ டோண்ட் வொரி"…! 'இனிமே நான் பார்த்துக்கறேன்'…! நர்ஸ் போலவே அசத்தலாக வந்திருக்கும் புதிய ரோபோ…!
- 'பல அலைகள் வந்ததுக்கு அப்புறம்...' கொரோனா 'இந்த மாதிரி' ஆக கூட சான்ஸ் இருக்கு...! - எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் 'ஷாக்' தகவல்...!
- கொரோனா 3-வது அலை ஏற்பட்டா குழந்தைகளுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுமா..? எய்ம்ஸ் இயக்குநர் முக்கிய தகவல்..!
- 'இந்த விஷயத்த கவனிச்சீங்களா'?.. இந்தியாவில் பரவும் 'டெல்டா' ரக கொரோனா குறித்து... மருத்துவர்கள் வெளியிட்ட நடுங்கவைக்கும் தகவல்!
- 'நீங்க ரெஸ்ட் எடுங்க...' 'எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம்...' 'கொரோனா வார்டில் செவிலியர்கள் செய்த சேவை...' - பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்...!
- ‘இங்க எல்லாருக்கும் தடுப்பூசி போட்டாச்சு’!.. முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்ட இந்தியாவின் ‘முதல்’ கிராமம்..!