‘எங்களுக்கு வேற வழி தெரியல’.. ஊரடங்கால் ‘வறுமை’.. பெற்றோர் செய்த அதிர்ச்சி காரியம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கால் ஏற்பட்ட வறுமை காரணமாக ஒரு தம்பதி, தங்களது குழந்தையை 3,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

மேற்வங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் தாரா-டபசி. இவர்களுக்கு இரண்டு மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இருவரும் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். அதனால் குழந்தைக்கு உணவு வாங்கிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வறுமை காரணமாக தங்களது குழந்தையை 3000 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

சில நாட்களாக குழந்தையை காணததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஹவுரா மாவட்டத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு குழந்தையை விற்றது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடமிருந்து குழந்தையை போலீசார் மீட்டனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக உள்ள ஊரடங்கால் பலர் வேலையை இழந்துள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கால் வேலை இழந்து வருமானம் இல்லாததால் பெற்ற குழந்தையை 3000 ரூபாய்க்கு விற்ற பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்