'இத ஒழுங்கா ஃபாலோ பண்ணுங்க'... 'இல்லன்னா 'பெட்ரோல்' கிடையாது'... பெட்ரோல் பங்குகள் அதிரடி !

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விபத்தில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இதனால் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு பெட்ரோல் வழங்க முடியாது என பெங்களூரில் பெட்ரோல் நிலையங்கள் அறிவித்துள்ளன. பெங்களூரில் கடந்த சில ஆண்டுகளாக இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டுவது என பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என பெங்களூரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. இதனிடையே இது போன்ற முயற்சிகள் மூலம் பெங்களூரு நகரை விபத்தில்லா நகரமாக மாற்றும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது .

BENGALURU, PETROL, HELMATE, NO HELMET NO PETROL RULE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்