"உத்தரபிரதேசத்தில் 2 தங்க சுரங்கமாம்..." "மூவாயிரம் டன் தங்கமாம்..." "கடைசியில் எல்லாம் வதந்தியாம்..." GSI புது 'ரிப்போர்ட்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் 3000 டன் எடை அளவுள்ள தங்க சுரங்கம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் சோன்பஹாடி, ஹார்டி கிராமங்களில் சுமார் 3,350 டன் தங்கம் இருக்கும் 2 தங்க சுரங்கள் கண்டுபிடிக்கப்படதாக சோன்பத்ரா மாவட்ட சுரங்க அதிகாரி கே கே ராய் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

சோன் பஹாடியில் 2,943.26 டன் தங்கமும், ஹார்டி பகுதியில் 646.16 கிலோகிராம் தங்கமும் இருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்திருந்தார்.

மேலும் தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் அதனை வெட்டி எடுக்கும் பணிக்கு நில ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கையில் உத்தரபிரதேச மாநில அரசு இறங்கியுள்ளதாகவும், டெண்டர் ஏலம் விடப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அப்படி ஒரு தகவலை இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் சார்பில் யாரும் கொடுக்கவில்லை என்றும் அதன் டைரக்டர் ஜெனரல் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றும் ஜி.எஸ்.ஐ. சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இதுபோன்ற தரவுகளை ஜி.எஸ்.ஐ.(இந்திய புவியியல் ஆய்வு மையம்) யைச் சேர்ந்த எவரும் வழங்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

இந்திய புவியியல் வடக்கு மண்டலம் கடந்த 1998 முதல் 2000 ஆண்டு வரை இப்பகுதியில் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் இப்பகுதியில் மொத்தமுள்ள 52,806.25 டன் தாது மூலப்பொருட்களிலிருந்து 160 கிலோ தங்கம் மட்டுமே எடுக்க முடியும் என  தெரியவந்ததால் இப்பகுதி தங்கம் எடுப்பதற்கான சிறந்த பகுதியாக தங்கள் சார்பில் அறிக்கை அளிக்கப்படவில்லை எனக் கூறினார்.

UTTARPRADESH, SONBHADRA, GSI, SRIDAR, GOLDMINE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்