கொரோனா 3-வது அலை ஏற்பட்டா குழந்தைகளுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுமா..? எய்ம்ஸ் இயக்குநர் முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா 3-வது அலை ஏற்பட்டால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலை அதிகளிவில் பாதிப்பை ஏற்படுத்தியது. 2-வது அலையில் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் ஆக்ஸிசன் தேவை அதிகரித்தது. இதனால் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிய நிலையில், உயிரிழப்புகளும் 4 ஆயிரத்தை தொட்டது. இதில் இணை நோய் இல்லாத 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அதிகளவில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

மத்திய, மாநில அரசுகளில் தீவிர நடவடிக்கைகளால், கொரோனா தொற்று கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனிடையே நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் இந்தியாவில் கொரோனா 3-வது அலை உருவானால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என வல்லுனர்கள் எச்சரிக்கை செய்தனர். இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இதுதொடர்பாக எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர ரன்தீப் குலேரியா (Randeep Guleria) விளக்கமளித்துள்ளார். அதில் ‘கொரோனா 3-வது அலையால் உலகளவில் அல்லது இந்தியாவில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான எந்த கூர்நோக்கு தரவுகளும் இல்லை. கொரோனா 2-வது அலையில் கூட குழந்தைகள், லேசாக உடல்நலக்குறைவு மற்றும் இணை நோயால் மட்டுமே பாதிக்கப்பட்டனர். எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு கடுமையான நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று நான் நினைக்கிறேன்’ என எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்